சண்டை சச்சரவு, மனக் கஷ்டம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவச் செய்யும் ஒற்றை இலை!

A leaf that brings peace to the family
Bay leaf
Published on

பிரிஞ்சி இலை எனப்படும் பிரியாணி இலை, உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும். அது மட்டுமல்ல, அதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும், இதற்கு நமது விருப்பங்களை நிறைவேற்றித் தரும் ஆற்றலும் இருக்கிறது. அது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பிரியாணி இலையின் மருத்துவ குணங்கள்: மருத்துவ குணம் நிறைந்த பிரிஞ்சி இலைகளில் பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

1. பிரியாணி இலையை உணவில் சேர்க்கும்போது, அதிலுள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவை அதிகரிக்கிறது. பல்வேறு நோய்களைக் குணப்படுத்த பிரிஞ்சி இலைகளைப் பயன்படுத்தலாம்.

2. பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்னையை சரி செய்ய உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
Chanakya | இந்த விஷயங்களை கட்டாயம் தனியாக செய்ய வேண்டும்... சாணக்கியர் கூறும் அட்வைஸ்!
A leaf that brings peace to the family

3. வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்தது பிரியாணி இலை. இந்த வைட்டமின்கள் அனைத்தும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

4. பிரிஞ்சி இலை வயிற்று வலியை குணப்படுத்துவதோடு, சைனஸ், மன அழுத்தம், மூக்கடைப்பில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

5. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பிரியாணி இலைகள் மிகவும் சிறந்தது. இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த இலையை அரைத்து பொடி செய்து ஒரு மாத காலம் சாப்பிட, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

6. இந்த இலைகள் பல்வேறு தொற்று நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. சளி, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க கஷாயமாகவும் இதைக் குடிக்கலாம்.

7. பிரியாணி இலையின் தேநீர், உடல் எடையை குறைக்க உதவும். ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வேண்டும். இதில் 2 முதல் 3 பிரியாணி இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 2 நிமிடங்கள் சென்ற பிறகு அடுப்பை அணைத்து, அந்த நீரை வடிகட்டி, சிறிது தேன் சேர்த்து பருகலாம்.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமாக செய்ய ஆசைப்பட்டு விபரீதத்தை வாங்க வேண்டாமே!
A leaf that brings peace to the family

நினைத்ததை நிறைவேற்றித் தரும் பிரியாணி இலை: பிரியாணி இலையில் நமது கோரிக்கைகளை எழுதி வைத்தால் அது நிறைவேறும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. விருப்பங்கள் பணம் சார்ந்ததாக அல்லது நல்ல வேலை கிடைக்க, திருமணம் நடக்க, குழந்தைகள் நன்றாகப் படிக்க போன்ற நியாயமான ஆசைகள் எது வேண்டுமானாலும் நிறைவேறும்.

பிரியாணி இலையை எரித்தால் கிடைக்கும் நன்மைகள்: சாம்பிராணி கரண்டியில் ஏழு எட்டு பிரியாணி இலைகளை நொறுக்கிப் போட்டு சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து அதை எரிக்க வேண்டும். அந்த மணத்தை வீடெங்கும் பரவச் செய்யலாம். இதனால் வீட்டின் நேர்மறை சக்தி அதிகரிக்கும். வீடே நல்ல நறுமணத்துடன் விளங்கும். வீட்டில் உள்ளவர்களின் மனதில் நல்ல மாற்றத்தை தரும். மனதை அமைதிப்படுத்தவும் செய்யும். இதனால் சிடுசிடு கடுகடுவென இருப்பவர்கள் கூட தனது இயல்பு நிலை மாறி அமைதியான மன நிலைக்கு மாறிவிடுவார்கள்.

எஸ்.விஜயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com