சுட்ட எண்ணெயைக் கொட்டி விடாதீர்கள்! - பழைய எண்ணெயைப் புதியது போல மாற்றும் ரகசியம்!

Cooking oil tips
Cooking oil tipsImg Credit: AI Image
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on

நீங்கள் ஒருமுறை எண்ணெயில் பலகாரம் செய்து பயன்படுத்திய பிறகு அதே எண்ணெயை அப்படியே பயன்படுத்தாமல் அதை வடிகட்டுவீர்கள்‌. ஆனாலும் அது அவ்வளவு சுத்தமாக ஆகாது. நாம் பஜ்ஜி, பக்கோடா, பூரி, போண்டா, வடை போன்றவற்றைத் தயாரிக்கும் போது எண்ணெயில் அடியில் துகள்கள் தங்கிவிடும.

எண்ணெயும் கருப்பாக மாறி அதன் சுவையை மாற்றி மீண்டும் பயன்படுத்த முடியாமல் போகும். எண்ணை விற்கிற விலையில் நாம் அத்தனை எண்ணெயையும் வீணடிக்க முடியாது. இந்த பிரச்னையைக் தடுக்க வீட்டில் உள்ள ஒரு பொருளைக் கொண்டு நல்ல தீர்வு பெறலாம்‌.

வாணலியில் அடியில் தங்கிவிடும் மணல்கள் மற்றும் எண்ணை பிசுக்குகள் மீண்டும் பயன்படுத்துவது கஷ்டமாக இருக்கும். இதில் மீண்டும் சமைத்தால் ருசி  கெட்டுப்போக வாய்ப்புண்டு. பெரும்பாலோர் எண்ணையில் பலகாரங்கள் செய்து பிறகு இதை வடிகட்டுவார்கள்‌. இதனால் வடிகட்டியை சுத்தமாக்க கடினமாக இருக்கும். எண்ணையும் முழு சுத்தமாவதில்லை‌. இதைத் தடுத்து பயன்படுத்திய எண்ணெயை நன்கு சுத்தமாக்க நம் வீட்டில் உள்ள பொருள் ஒன்றே போதும். 

அது என்ன தெரியுமா? பஞ்சு உருண்டைதான்‌.

வடிகட்டியை பஞ்சால் முழுவதுமாக மூடி அதன்மீது மெதுவாக எண்ணெயை ஊற்றவும். பஞ்சின் அளவு வடிகட்டியை விட சிறியதாக இருக்க வேண்டும்‌. அதில் எண்ணெயை ஊற்றும் போது மணல் தூசு மற்றும் பிசுக்குகள் பஞ்சில் தங்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்கு பதில் இதை குடிங்க! அசால்ட்டாக உடல் எடையை குறையும்!
Cooking oil tips

பஞ்சின் மீது விடப்படும் எண்ணை வெளியே வரும்போது சுத்தமாக வரும். பஞ்சு அனைத்து அசுத்தத்தையும் ஈர்த்துக் கொள்ளும். பொதுவாக சுட்ட எண்ணெயை வடிகட்டும்போது வடிகட்டியை சுத்தம் செய்வது மிகவும் கடினம்‌. இந்த முறையில் வடிகட்டியில் ஒட்டாமல் பஞ்சில் ஒட்டிக் கொள்ளும்.

பிறகு பஞ்சை தூக்கி எறிந்துவிடுங்கள். உணவுகளை எண்ணெயில் பொரித்த பிறகு இந்த மாதிரி பஞ்சை பயன்படுத்தி எண்ணெயை வடிகட்டுவது உங்கள் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

logo
Kalki Online
kalkionline.com