AADHI SOLAR ENTERPRISES
AADHI SOLAR ENTERPRISES

அதிகரிக்கும் மின்கட்டணத் தொல்லை… 'ஆதி சோலார்' இருக்க இனி இல்லை கவலை!

Published on

பெருகி வரும் மின்கட்டணத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என பலரும் ஆலோசித்து தேர்ந்தெடுக்கும் வழியாக உள்ளதுதான் சோலார் பேனல்கள் அமைக்கும் முறை. இயற்கையின் படைப்பான சூரியனிடமிருந்து கதிர்களை சேமித்து மின்சக்தியாக மாற்றி நமக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் அறிவியல் கண்டுபிடிப்பு சாதனம்தான் சோலார் பேனல்கள். 

சரி இவை மின்கட்டணத்தை முழுமையாக குறைக்குமா? அரசு மானியம் உண்டு என்று சொல்கிறார்களே? அதன் விபரம் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைத் தெளிவாகத் தருகிறார் வீடு, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகளுக்கு சோலார் பேனல்களை அமைத்துக் கொடுக்கும் சென்னையை சேர்ந்த ஆதி சோலார் என்டர்பிரைசிஸ் இயக்குநர் S.கமலக்கண்ணன்.

தமிழகம் முழுவதும் சுமார் 400 க்கும் மேற்பட்ட சோலார் இணைப்புகளை பெற்றுத்தந்த இவரது நிறுவனம் சென்னை கோயம்பேட்டில் மட்டுமின்றி கோயம்புத்தூர், திருச்சி, கும்பகோணம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இவரது டீலர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் பேனல்களை நிறுவ உதவுகிறார். மேலும் இந்நிறுவனத்திற்கு டீலர்கள் தேவை என்றும் பணி வாய்ப்பு தருகிறார் இவர்.

மத்திய அரசின் பி.எம். சூர்யா கார் (PM Surya Ghar) திட்டத்தின் மூலம் ரூபாய் 78,000 வரை மானியம் பெற்றுத் தருகிறது இவரது நிறுவனம். (1 KW - ரூ.30,000 மானியம், 2 KW - ரூ.60,000 மானியம், 3 KW - 10 KW - ரூ.78,000 மானியம்) குறிப்பாக இந்த மானியம் பெற தமிழ்நாட்டில் மானியம் வாங்கி தருகின்ற 'அரசு அங்கீகாரம் பெற்ற வென்டார்' ஆகவும் இருக்கிறது. வீடு உபயோகத்துக்கு அமைக்கப்படும் சோலார் இணைப்புகளுக்கு, விதிகளுக்கு உட்பட்டு மானியம் பெற முடியும். 

Prasad and Kumar
Prasad and Kumar

சோலார் பேனல்களினால் மின்கட்டணம் முழுமையாக குறையுமா என்பதற்கு இவரது கஸ்டமர் (பயனாளி) திரு.பிரசாத் நம்மிடம் கூறியது...

"நிச்சயமாக... முதலில் நானும் நம்பவில்லை. ஆனால் பல இடங்களில் விசாரித்து இறுதியாக ஆதி சோலார் என்டர்பிரைசிஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் இரண்டே நாட்களில் பேனல் அமைத்த பின் ரூபாய் 5,500 வந்து கொண்டிருந்த மின்கட்டணம் அப்படியே குறைந்து 500 ரூபாய் வந்தது ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி தந்தது. ஆதி சோலார் என்டர்பிரைசிஸ் நிறுவனத்தின் தெளிவான விளக்கம் மற்றும் சோலார் அமைப்பதில் நேர்த்தியான தொழில்நுட்ப முறை மிகவும் பாராட்டுக்குரியது. எனது மின்கட்டண பில்களை உங்கள் பார்வைக்கு இங்கு தந்துள்ளேன். 

"ஆதி சோலார் நிறுவன செயல்பாடுகள் குறித்து அவர்களது மற்றொரு பயனாளி திரு.R.குமார் கூறியது.... 

"நான் சோலார் பேனல் போடவேண்டும் என்று முடிவு செய்த பின் யோசிக்காமல் தேர்ந்தெடுத்த நிறுவனம் ஆதி சோலார் என்டர்பிரைசிஸ் தான். காரணம் மற்ற எந்த நிறுவனங்களை விடவும் தரமான சோலார் பேனல்கள், இன்வெர்டர், ஸ்டாண்ட்கள் என குவாலிட்டியான பொருள்களுடன் குறை இல்லாத பர்பெக்டான வடிவமைப்புடன் குறைவான நாட்களுக்குள் நாங்கள் கேட்டது போல் சோலார் இணைப்பு தந்தது திருப்தியாக இருக்கிறது. தமிழ்நாடு மின்வாரியம் மூலம் பெறக்கூடிய சோலார் மீட்டரை 15 நாட்களுக்குள் வாங்கி தந்துவிட்டார்கள் மற்றும் நான் 3KW பொருத்தியதால் முப்பது நாட்களுக்குள் எனது வாங்கி கணக்கில் 78 ஆயிரம் வந்து சேர்ந்து விட்டது. 

மேலும்  சோலார் பேனல்களை எப்படி எப்போது தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும் என்ற தகவல்கள் தந்து அதன் பராமரிப்புக்கு உதவுகின்றனர். பேனல்களில் இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளதால் மின்னல், மழை போன்றவைகளால் எவ்வித பாதிப்பும் நேராது என்றும் வீட்டில் இருக்கும் மின் உபகரணங்களுக்கும் எந்த

பாதிப்பும் நேராது என்ற உறுதியையும் தருகிறது இவரது நிறுவனம். இந்த திட்டத்திற்கான வாங்கி கடன் முதற்கொண்டு வாங்கி தருகிறார்கள் என்பது தனி சிறப்பு." வீட்டு மனைகளுக்கும் சோலார் விளக்கு பொருத்தித் தரப்படும்.

AADHI SOLAR ENTERPRISES
AADHI SOLAR ENTERPRISES

"ஒரு முறை செலவில் மற்றும் அரசாங்க மானியங்களுடன் நிறுவப்படும் சோலார் பேனல்கள் மூலம், மின்சார கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல், இயற்கையான சூரிய மின்சாரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் சுமார் 25 ஆண்டுகளுக்கு இருப்பீர்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்," என்கிறார் ஆதி சோலார் என்டர்பிரைசிஸ் இயக்குநர் S.கமலகண்ணன். 

தொடர்புக்கு:

S. கமலகண்ணன், ஆதி சோலார் என்டர்பிரைசிஸ்

+91 91763 62015

logo
Kalki Online
kalkionline.com