முதியவர்கள் நலனுக்காக ஆய்வுகள் கூறும் அறிவுரைகள்!

ஆரோக்கியமாக வாழும் முதியோர்
ஆரோக்கியமாக வாழும் முதியோர்https://housing.com
Published on

நீங்கள் பயணம் செய்யும்போது பேருந்திலோ அல்லது ரயிலிலோ முதியவர்கள் வந்து உங்கள் அருகில் நின்றால் அவர்கள் வயதானவர்கள் நிற்க கஷ்டப்படுவார்கள் என்று எழுந்து உங்கள் இடத்தை கொடுப்பீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். அவர்கள் நிற்க முடியுமென்றால் அவர்களை நிற்க விடுங்கள். அதுவே, அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சி என்கிறார்கள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆராய்ச்சியாளர்கள். முதியவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நடக்க அனுமதியுங்கள். படிகளில் ஏறிச் செல்ல நீங்களே அவர்களுக்கு உதவுங்கள். அது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது என்கிறார்கள்.

வயதானவர்கள் பொதுவாக பழங்கதைகளை பேசுவதில் ஆர்வம் காரணமாக அதிகம் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் அதிகம் பேசுவது மற்றவர்களுக்கு சங்கடமாக தோன்றும். ஆனால், அப்படி அதிகம் பேசுவது வயதானவர்களுக்கு மூன்று வழிகளில் நல்லது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். முதலாவதாக அவர்களின் மூளை நன்கு செயல்படுகிறது. அவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது அவர்களின் மொழியறிவு மற்றும் சிந்தனை விரிவடைகிறது. அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இதனால் அவர்களுக்கு அல்சைமர் நோய் வருவது தவிர்க்கப்படுகிறது. இரண்டாவது, அவர்கள் பேசும்போது அவர்களின் மன அழுத்தம் குறைகிறது. மூளையின் திறன் அதிகரிக்கிறது.

மூன்றாவதாக, அவர்கள் பேசுவதால் முகத் தசைகளுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், தொண்டை பகுதிகளுக்கு உடற்பயிற்சியாகிறது. நுரையீரலுக்கு அதிகம் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. கண்களுக்கும், காதுகளுக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது. இதனால் செவித்திறன் பாதிக்கப்படுவது குறைகிறது என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
புரோபயோட்டிக்ஸ் மற்றும் பிரீபயோட்டிக்ஸ் இரண்டிற்கும் வேறுபாடு தெரியுமா?
ஆரோக்கியமாக வாழும் முதியோர்

வயதானவர்களில் சிலர் வயதாகிவிட்டதே என்று வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் அடிக்கடி அந்தக் கோயிலுக்குச் சொல்கிறேன், இந்தக் கோயிலிலுக்குச் செல்கிறேன் என்று போய் வருவார்கள். குறிப்பாக, வயதான பெண்கள். இதற்குத் தடை போடதீர்கள். அடிக்கடி வெளியே சென்று மக்களோடு மக்களாக உலாவி வருவது முதியவர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு சமம் என்கிறார்கள் இஸ்ரேல் நாட்டின் ஹெப்டோ மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மேலும், ஆன்மிக அனுபவங்களுக்கு ஒருவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் திறன் உண்டு என்கிறார்கள் உளவியல் மருத்துவ நிபுணர்கள்.

பெரும்பாலான முதியவர்கள் அவர்களைச் சுற்றி இருக்கும் யாருடைய பேச்சுவார்த்தைகளையும், விமர்சனங்களையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய எண்ணங்களிலும், செயல்களிலும் விடாப்பிடியான தன்மையுடன் எதையும் பாசிட்டிவாக பார்க்கும் திறனுடன் செயலாற்றுவார்கள். இது அவர்களின் வாழ்நாளை அதிகரிக்க உதவுகிறது என்கிறார்கள் கலிபோர்னியா மற்றும் ரோம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

60 வயதில் ரிட்டயர்மென்ட்க்கு பிறகும் வயதானவர்கள் சிலர் வீட்டில் இருக்க பிடிக்காமல் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று வருவார்கள். அவர்களை தடுக்காதீர்கள். இந்த மாதிரி 60 வயதிற்கும் மேற்பட்டு வேலை பார்ப்பவர்கள் பொருளாதார ரீதியாகவும் உடல்நிலை ஆரோக்கிய ரீதியாகவும் இருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்நாளை 11 சதவீதம் அதிகரிப்பதாகவும் அமெரிக்காவின் ஓரகான்  யுனிவர்சிட்டி ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாழ்க்கையில் எந்த வயதில் மனிதர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ரிட்டயர்மென்ட்க்கு பிறகு வரும் 65 முதல் 75 வயதில்தான் மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். ஆய்வில் தெரிய வந்த உண்மை இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com