ரசாயன சோப்புகளால் கைகளில் பாதிப்பா? இதோ எளிய தீர்வு!

Soap
Soap
Published on

தினமும் சமையல் பாத்திரங்களைக் கழுவுவது என்பது நம் வீடுகளில் ஒரு தவிர்க்க முடியாத வேலை. இதற்காக நாம் கடைகளில் விற்கும் பலவிதமான சோப்புகளையும், திரவங்களையும் பயன்படுத்துகிறோம். இவை பாத்திரங்களைச் சுத்தமாக்க உதவினாலும், அவற்றில் சேர்க்கப்படும் சில ரசாயனப் பொருட்கள் நமது கைகளின் சருமத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை பலருக்கும் உண்டு.

கடைகளில் கிடைக்கும் பாத்திரம் துலக்கும் சோப்புகளில் உள்ள கடுமையான ரசாயனங்கள் சிலருக்குக் கைகளில் அரிப்பு, வறட்சி, தோல் உரிதல் அல்லது வெடிப்புகள் போன்ற ஒவ்வாமைப் பிரச்சனைகளை உருவாக்கலாம். தொடர்ந்து இவற்றை உபயோகிக்கும்போது கைகள் மென்மையிழந்து கடினமாக மாற வாய்ப்புண்டு. இந்தப் பாதிப்புகளில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க, வீட்டிலேயே சில பொருட்களைப் பயன்படுத்தி நாமே சோப் தயாரித்துக்கொள்ளலாம்.

வீட்டிலேயே சோப் தயாரிக்கத் தேவையான முக்கியமான பொருட்கள் வீட்டில் இருக்கும் எண்ணெய், காஸ்டிக் சோடா, மற்றும் தண்ணீர். முதலில், சரியான அளவு காஸ்டிக் சோடாவை ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீரைக் கலந்து, காஸ்டிக் சோடா நன்றாகக் கரையும் வரை ஒரு கரண்டியால் பொறுமையாகக் கலக்க வேண்டும்.

காஸ்டிக் சோடா கலவை தயாரானதும், அதில் நீங்கள் தேர்வு செய்த எண்ணெயைச் சேர்த்து, சுமார் பத்து நிமிடங்கள் வரை இடைவிடாமல் நன்கு கலக்க வேண்டும். இவ்வாறு கலக்கும்போது, கலவை மெதுவாக கெட்டியாகி, கூழ் போன்ற பதம் வரும். இதுதான் சோப் உருவாகும் ஆரம்ப நிலை. கலவை கெட்டியான பிறகு, உங்களுக்கு விருப்பமான வாசனைக்குச் சில துளிகள் எசன்ஷியல் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். சோப்புக்கு நிறம் வேண்டுமென்றால் சிறிதளவு ஃபுட் கலரை சேர்க்கலாம். பின்னர், 'சபீனா' எனப்படும் ஒரு பொருளையும் சேர்த்து நன்றாகக் கலந்து விட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மொறுமொறுப்பான டீ கடை வெங்காய போண்டா செய்வது எப்படி?
Soap

தயாரிக்கப்பட்ட கலவையை சோப் அச்சுகளில் ஊற்றி விட வேண்டும். சுமார் பத்து மணி நேரம் அல்லது அது கெட்டியாகும் வரை அப்படியே விட்டு விட வேண்டும். சோப் அச்சில் வார்த்த கலவை நன்றாகக் காய்ந்து கெட்டியான பிறகு, அதை அச்சிலிருந்து எடுத்துப் பயன்படுத்தலாம். எனினும், இந்தச் சோப் முழுமையாக இறுகி, கைகளுக்கு மென்மையாக இருக்கச் சுமார் முப்பது நாட்கள் வரை ஆகலாம். 

கடைகளில் வாங்கும் ரசாயன சோப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் சருமப் பாதிப்புகளைத் தவிர்க்க, வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்தச் சோப் ஒரு சிறந்த மாற்றாக அமையும்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கடை கோதுமை - தலை முடி பிரச்சனை! நடந்தது என்ன?
Soap

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com