வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவும் '6 / 10' ரூல் தெரியுமா?

House Cleaning
House cleaning woman
Published on

நாம் எல்லோரும் நம் வீட்டை எப்பவும் சுத்தமாக வைத்திருக்கவே விரும்புவோம். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே! எந்நாளும் நம் வீடு 'பளிச்'சென்று தோற்றமளிக்க உருவானதே '6 / 10' ரூல். இந்த ரூல் நமக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

நாம் நம் வீட்டிற்குள் செய்ய வேண்டிய வேலைகளை பகுதி பகுதியாகப் பிரித்து செய்வது நன்மை தரும். முன்னுரிமை கொடுத்து தினசரி செய்யவேண்டிய 6 வேலைகளை பட்டியலிட்டு அவற்றை  தினமும் செய்து முடித்துவிட வேண்டும். அவை: படுக்கைகளை ஒழுங்குபடுத்தி வைத்தல், பாத்திரம் கழுவுவது, டைனிங் டேபிளை துடைப்பது, வீட்டை பெருக்குதல், சிங்க்கை சுத்தம் பண்ணுவது, தரையில் சிதறிக் கிடக்கும் பொருட்களை சேகரித்து அதனதன் இடத்தில் அடுக்கி வைத்தல். இந்த 6 வேலைகளும் முன்னுரிமை லிஸ்ட்டில் இடம்பெறும். இவற்றை தினமும் செய்யும்போது அவை அதிக நேரம் எடுக்காது என்பதுடன், இந்த வேலைகளை வாரா வாரம் டீப் க்ளீனிங் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.

இதையும் படியுங்கள்:
இப்படியும் நடக்குமா?! ஒருவர் உடலில் வேறொருவரின் நினைவுகள்! இதயம் மாறியதும் மாறிய வாழ்க்கை!
House Cleaning

இனி, நாம் வாரம் ஒருமுறை செய்து முடிக்க வேண்டிய பத்து வகையான வேலைகளைப் பட்டியலிடுவோம். மைக்ரோவேவ் ஓவனை சுத்தம் பண்ணுவது, குளிர் சாதனப் பெட்டியை துடைப்பது, தரையை துடைப்பது, குளியல் அறைகளை சுத்தம் செய்வது, படுக்கை விரிப்புகள் மற்றும் டவல்களை துவைத்தல், கார் வாஷ், ஃபர்னிச்சர்களை தூசி தட்டி துடைப்பது. செல்ல பிராணிகளின் பாத்திரங்களை சுத்தம் பண்ணுவது, ஸ்டவ் கிளீனிங், சமையல் பொருட்களை சேமித்து வைத்திருக்கும் அறையை சுத்தம் செய்வது.

இவை தவிர, மாதம் ஒரு முறை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலைக் காண்போம். ஜன்னல்களை சுத்தப்படுத்துவது, வீட்டு உபயோகப் பொருட்களை டீப் க்ளீனிங் செய்தல், பாத்ரூம் ஷவர் மற்றும் தொட்டிகளை சுத்திகரித்தல். கார் நிறுத்துமிடத்தை சுத்தம் செய்வது. காரை வாக்யூம் செய்து தூசியின்றி வைப்பது, அங்கங்கு குவிந்து கிடக்கும் பேப்பர்களை ஒழுங்குபடுத்தி வைப்பது அல்லது பழைய பேப்பர் வாங்குபவனிடம் ஒப்படைப்பது.

இதையும் படியுங்கள்:
‘குழந்தையை சரியாக கவனிக்க முடியவில்லை’ என்ற குற்ற உணர்வு கொண்ட பெற்றோரா நீங்கள்?
House Cleaning

அடுத்து, மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டிய வேலைகளைக் காண்போம். ஏர் ஃபில்டர் மாற்றுதல், லைட் மற்றும் ஃபேன் போன்றவற்றை சுத்தம் செய்தல், கதவுகள் மற்றும் பேஸ் (base) போர்டு க்ளீனிங், அலமாரிகளை சுத்தம் செய்தல், துணி மணிகளை ஒழுங்காக அடுக்கி வைத்தல்.

இப்போது '6 / 10' விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டை சுத்தமாக வைக்கும் முறைகளைத் தெரிந்திருப்பீர்கள். உங்கள் வீட்டின் அமைப்பிற்கேற்றபடி புதிதாக ஒரு வேலையை கூட்டியோ அல்லது இருக்கும் வேலைகளில் எதையாவது குறைத்தோ வேலைப் பட்டியலை தயாரித்துக் கொள்ளலாம். தினசரி செய்ய வேண்டிய வேலைகளின் நேரத்தை சரியானபடி பிளான் பண்ணியும், பிற வேலைகளுக்கான தேதிகளை, போனில் நினைவூட்டும் சேவையை பயன்படுத்தியும் செய்து முடிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com