பட்டுப் புடைவை வாங்கப்போறீங்களா? இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

Are you going to buy a silk saree? Know this first
Are you going to buy a silk saree? Know this first

ட்டுப் புடைவைகள் நீண்ட நாட்கள் தரமானதாக இருக்க புடைவையைக் கட்டும் முறை, துவைக்கும் முறை, அயர்ன் செய்யும் முறை, மடித்துப் பராமரிக்கும் முறை என நான்கு நிலைகள் உள்ளன. இவை அனைத்தையும் செவ்வனே செய்தால் புடைவை புது மெருகுடன், நீண்ட நாட்கள் உழைக்கும் என்பது நிச்சயம். இனி, இந்த நான்கு பட்டுப்புடைவை பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம்.

கட்டும் முறை:

1. கண்டிப்பாக பின் போடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சொருகும் வகை, ‘ஸாரி பின்’ அல்லது ‘ஸாரி கிளிப்’ உபயோகிக்க வேண்டும்.

2. இரண்டு புறமும் பார்டர் உள்ள புடைவைகளைக் கட்டும்போது இடுப்புப் பகுதி பார்டர் தெரிய, உள் பாவாடையுடன் பார்டரை இறுக்கமாக வைத்து பின் போடுபவர்கள், அதற்குப் பதிலாக அந்தப் பகுதியை மேலும் ஒரு ஜாண் அல்லது லூசாக விட்டுப் பாவாடையில் செருகினால், பின் போட்ட தோற்றம் இருக்கும்.

3. கொசுவம் வைத்து அதை அழுத்தி விடும்போது பார்டரையும் சேர்த்து அழுத்தாதீர்கள். உடல் வரை அழுத்தினாலே போதும். இதனால் பார்டர் வளைவாக, அழகாக, இயற்கையாக பொம்மைக்குக் கட்டியதுபோல் இருக்கும்.

துவைக்கும் முறை:

1. முதன் முதலில் பட்டுப் புடைவையைத் துவைக்கும்போது குளிர்ந்த நீரில், சோப்புத் தூள் போடாமல் நனைத்து அழுத்திப் பிழியாமல் உலர்த்த வேண்டும்.

2. இரண்டாம் முறை துவைக்கும்போது, சோப்புத் தூள் பயன்படுத்தாமல் புங்கங்கொட்டை எனப்படும் பூந்திக் கொட்டைகளை 4 அல்லது 5 எடுத்து பொடித்துக் குளிர்ந்த நீரில் போட்டு நுரை வரும்வரை கலக்கி, பின் நனைக்கவும். 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

3. பூந்திக்கொட்டை கிடைக்கவில்லையானால் ஷாம்பூ உபயோகிக்கலாம். ஆனால் 1 அல்லது 2 முறைதான். (அவசரத்திற்கு இம்முறை)

4. பட்டுப் புடைவையை அடித்துத் துவைக்கக் கூடாது. கும்பிதான் அலச வேண்டும். 3 அல்லது 4 முறை அலசி, கஞ்சி போட்டு, உதறி, நீவிவிட்டு உலர்த்த வேண்டும்.

கஞ்சி போடும் முறை:

1. மைதா அல்லது சாதம் வடித்த நீர் அல்லது ஜவ்வரிசி அல்லது ஆரரூட் இதில் ஏதேனும் ஒன்றைப் போடலாம். ஜவ்வரிசி கஞ்சி மினுமினுப்பைத் தரும். ஜவ்வரிசியை மாவாக அரைத்து வைத்து 1 புடைவைக்கு அரை ஸ்பூன் வீதம் 1 லிட்டர் நீரில் கரைத்து கஞ்சி போடலாம்.

2. ஜவ்வரிசி மாவு இல்லை என்றால் 1 புடைவைக்கு 1 ஸ்பூன் என்ற விதத்தில் ஜவ்வரிசியை குக்கரில் சாதத்துடன் வேக வைத்து அரை லிட்டர் வெதுவெதுப்பான நீரில் கரைத்து, அதை 1 லிட்டர் குளிர்ந்த நீரில் கரைத்துக் கஞ்சி போடலாம்.

3. பார்டர் சுருக்கம் போக இரண்டு பேராக இழுத்து, நீவி விட்டு அதிகம் மடிக்காமல் உலர்த்த வேண்டும். முடிந்தால் ஒற்றையாக உலர்த்தலாம்.

4. எண்ணெய்க் கறைகள் சிறிதாக இருந்தால் கறை நீங்கும் வரை அந்த இடத்தில் மண்ணெண்ணெய் விட்டுக் காய விடலாம் அல்லது புடைவை முழுவதையும் அரை லிட்டர் மண்ணெண்ணெயில் 10 நிமிடம் ஊற வைத்து, உதறி உலர்த்த வேண்டும். இது எளிமையான உலர் சலவை முறை. இதற்குக் கஞ்சி தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
கடன் வாங்காமல் பிரச்னைகளை சமாளிக்க 8 வழிகள் தெரியுமா?
Are you going to buy a silk saree? Know this first

இஸ்திரி செய்யும் முறை:

1. இஸ்திரி செய்யும்போது ஜரிகையை உள்புறமாக மடித்து சற்றே நீர் தெளித்து ஜரிகையின் மேல் நியூஸ் பேப்பரை வைத்து அதன் மேல் இஸ்திரி செய்ய வேண்டும். முதலில் ஜரிகையை மட்டும் இஸ்திரி செய்து பின் உடலைச் செய்வது எளிது.

2. கூடுமான வரை ஒற்றையாகவோ அல்லது இரண்டாகவோ மடித்து இஸ்திரி செய்யலாம்.

3. பட்டுப் புடைவையை எப்போதும் உள்புறமாக மடிக்க வேண்டும். ஆனால், மடிப்பின் மேல் இஸ்திரி செய்யக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com