வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கப் போறீங்களா? தாறுமாறா ஆகிடப்போகுது, ஜாக்கிரதை!

Paint the house
Paint the house
Published on

உங்கள் வீட்டை அழகுபடுத்தும் சில தனித்துவமான பெயிண்ட் வண்ணங்களை எப்படி தேர்வு செய்யலாம்…

உங்கள் புதிய வீட்டிற்கு ஏற்ப சரியான பெயிண்ட் வண்ணங்களை தேர்ந்தெடுப்பது ஓர் அற்புதமான அனுபவம் என்றாலும், அது அத்தனை சுலபமானதல்ல. உங்கள் பண்புகளைப் பிரதிபலிக்கும், உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற, மற்றும் உங்கள் வீட்டின் அழகியலை மேம்படுத்தும் இந்தச் செயலை எவ்வாறு நேர்த்தியாக செய்யலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

1. உங்கள் மனநிலை மற்றும் உணர்ச்சியைத் தீர்மானிக்கவும்

ஒவ்வொரு அறைக்கும் நீங்கள் விரும்பும் மனநிலை அல்லது உணர்ச்சியைக் கற்பனை செய்வதன் மூலம் இந்தப் பணியை தொடங்குங்கள். நீங்கள் ஒரு விசாலமான மற்றும் அமைதியான படுக்கையறை, பிரகாசமான மற்றும் ஆற்றல்மிக்க சமையலறை அல்லது விருந்தினர்களை ஆச்சரியபடுத்தும் அறையை அமைக்க விரும்புகிறீர்களா? என்று, நீங்களே உங்கள் வாழ்க்கை சூழலை புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக:

ஒரு அமைதியான படுக்கையறைக்கு: மென்மையான, நடுநிலை டோன்கள் கொண்ட வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

வியத்தகு சாப்பாட்டு அறை: சாம்பல், பழுப்பு, வெள்ளை மற்றும் கிரீம் போன்ற கிளாசிக் நியூட்ரல் ஷேட்களை(Neutral shades) இணைத்து அசத்தலான மற்றும் கம்பீரமான தோற்றம் உடைய சாப்பாட்டு அறையை உருவாக்கலாம்.

2. பிரபலமான வண்ணங்களை ஆராயுங்கள்

பிரபலமான தேர்வுகளுக்கு நீங்கள் கட்டுப்படாவிட்டாலும், அவை ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாக செயல்படும். அடுத்த

10 ஆண்டுகளுக்கு நீங்கள் உபயோகித்த வண்ணங்கள் மற்றவர்களிடம் பேசும் பொருளாக மற்றும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதை பின்பற்றும் பட்சத்தில் காலகாலத்திற்கும் உங்கள் வீடு உங்கள் கண்களுக்கு புதுமையாகவே தோற்றமளிக்கும்.

3. அண்டர்டோன்களைப் புரிந்துகொள்ளுங்கள்(Understand Undertones)

அண்டர்டோன்கள்(Undertones) என்பது ஒரு பெயிண்ட் நிறத்தில் ஒளிந்திருக்கும் நுட்பமான சாயல்கள்(subtle hues). குறிப்பிட்ட லைட்டிங் நிலைமைகளின் கீழ் இந்த வகை பெயிண்ட்கள் பிரகாசமாக வெவ்வேறு வண்ணங்களில் தெரியும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு சாம்பல் நிற பெயிண்ட் நீலம், பச்சை அல்லது ஊதா நிறங்களைக்கொண்டிருக்கலாம். இதுபோல் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த நுணுக்கங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

4. பெயிண்ட் மாதிரிகளை சோதிக்கவும்

வரும் முன் காப்பதே சிறந்தது என்று சொல்வதுபோல் பெயிண்ட் மாதிரிகளை வாங்கி அவற்றை உங்கள் சுவர்களுக்குப் பயன்படுத்தி பாருங்கள். நாள் முழுவதும் வெவ்வேறு விளக்குகளில் அவை எப்படி இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், செயற்கை ஒளிக்கு எதிராக இயற்கை ஒளியில் நிறங்கள் வித்தியாசமாகத் தோன்றும்.

5. உங்கள் வீட்டின் கட்டடக்கலையைக் கவனியுங்கள்

உங்கள் வீட்டின் வடிவமைப்பு முக்கியமானது. எடுத்துக்காட்டிற்கு கடலோர குடிசைகள், இப்போதுள்ள நவீன வீடுகள் மற்றும் விக்டோரிய பேலஸ் போன்ற அரண்மனைகள் என்று ஒவ்வொரு வடிவமைபுக்கும் தனித்தனி வண்ணங்கள் பொருந்தும். அப்படி உங்கள் வீட்டு கட்டடக்கலை பாணிக்கு எது சிறந்தது என்பதை முதலில் ஆராயுங்கள்.

இதையும் படியுங்கள்:
வாடகை ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு மட்டும் போடப்படுவது ஏன் தெரியுமா?
Paint the house

6. மரச்சாமான்கள் மற்றும் அலங்காரத்துடன் இணக்கம்

ஏற்கனவே உங்களிடம் உள்ள தளபாடங்கள்(Furnitures), கலைப்படைப்புகள் மற்றும் அலங்காரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படி உங்களிடம் கலைநயத்துடன் பொருட்கள் அல்லது அழகான ஓவியங்கள் இருந்தால், அவைகளுக்குப் பொருந்தும் வண்ணங்களைத் தேர்வு செய்யலாம்.

7. 60-30-10 விதியைப் பின்பற்றவும்

உங்கள் 100% ஆசைக்கேத்த வண்ணத்தை தேர்வு செய்ய சில குறிப்பிட்ட விஷயங்களை மனதில் வைத்து கையாளலாம்.

60%: வீட்டின் உள் சுவர்களுக்கான நிறம் பொதுவாக ஒரு நடுநிலை அல்லது பிரகாசம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்(neutral or calming shade).

30%: தளபாடங்கள்(Furnitures), மெத்தை மற்றும் பெரிய அலங்காரப் பொருட்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

10%: சிறிய அலங்காரப் பொருட்கள், தலையணைகள் அல்லது கலை படைப்புகளுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்

8. தனித்துவத்தைக் காட்டுங்கள்

காலங்கள் மாறத்தான் செய்யும், ஆனால் உங்கள் வீடுதான் காலாகாலத்திற்கும் ‘நீங்கள் யார்’ என்பதை, உங்கள் வீட்டிற்கு வரும் அனைவர் மனதிலும் பிரதிபலிக்கும். அதனால் நிதானமாக வண்ணங்களைத் தேர்வு செய்து உங்கள் பண்புகளை வெளிப்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com