வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கப் போகிறீர்களா? இதையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்!

Things to consider before painting your house
Things to consider before painting your house
Published on

பொங்கல் பண்டிகை மற்றும் வீட்டில் விசேஷங்களோ அல்லது துக்க நிகழ்வுகளோ நடக்கும்போது வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது வழக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் விதத்தில் வீட்டில் எந்த நிறத்தில் பெயிண்ட் அடிக்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பெயிண்டின் வகைகள்: பெயிண்டில் டெக்கரேட்டிவ் பெயிண்டிங் வீடுகளுக்கும் ஆட்டோ மொபைல் பெயிண்டிங் வாகனங்களுக்கும் இன்டர்ஸ்டியல் பெயிண்டிங் பெரிய கம்பெனிகளுக்கும் அடிக்கப்படுகிறது. ரீ பெயிண்டிங் என்பது பழைய கார், பஸ், பைக்குகளுக்கு அடிப்பதாகும். பவுடர் கோட்டிங் என்பது நம் வீடுகளில் உள்ள வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றுக்கு அடிக்கப்படும் பெயிண்ட்கள் ஆகும்.

பெயிண்டின் முக்கியத்துவம்: ஒரு கட்டடத்திற்கோ அல்லது ஒரு பொருளுக்கோ பெயிண்ட்தான் அழகு சேர்க்கும். எவ்வளவு பெரிய அழகான வீட்டைக் கட்டினாலும் பெயிண்டிங் செய்தால் மட்டுமே ஒரு ஃபினிஷிங் லுக் கிடைக்கும். அந்த வீடும் அழகான, முழுமையான வீடாக மாறும். அது வாகனமாக இருந்தாலும் சரி, பெயிண்ட் அடித்தால்தான் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்.

விலை குறைவான பெயிண்டுகள் ஆவியாகும் கரிம கலவைகளைக் கொண்டுள்ளதால் பெயிண்ட் காய்ந்தவுடன் மோசமான உட்புற காற்றின் தரம் மற்றும் உடல் நலப் பிரச்னையை ஏற்படுத்துவதால் தரமான பெயிண்டுகளை உபயோகப்படுத்துவதுதான் சிறந்தது.

பெயிண்ட் அடிப்பதற்கு முன் சுவர்களில் நீர் எதிர்ப்புப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இருண்ட அறைக்கு வெளிர் நிறங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பிரகாசமான அறைக்கு அடர்  நிறங்களைப் பயன்படுத்தலாம்.

பழைய பெயிண்ட் மேல் புதிய பெயிண்டிங்கை அடிக்கக் கூடாது. முதலில் சுவர்களை நன்றாக சுத்தம் செய்து, பிரைமர் கோட்டிங் போட்டு பிறகுதான் பெயிண்ட் அடிக்க வேண்டும். வீட்டின் உட்புறத்தில் புதிய கோட் பெயிண்ட் அடிப்பதற்கு முன்னால் சிறிய துளைகளை அடைத்து விட்டுதான் பெயிண்ட் அடிக்கும் செயல்முறையைத் தொடங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பாமாயிலில் தயாரான உணவு இதயப் பிரச்னைகளை ஏற்படுத்துமா?
Things to consider before painting your house

ஏராளமான தூசி மற்றும் குப்பைகள் சுவர்களில் சிக்கிக்கொள்வதால் ஈரமான துணியால் சுத்தம் செய்யலாம் அல்லது வேக்யூம் செய்யலாம். அடர் நிற பெயிண்டின் மேல் வெளிர் நிறத்தை அடிக்கும்போது ப்ரைமரை உபயோகிக்க வேண்டும்.

பெயிண்டிங் வேலை தொடங்கும் முன்பு, மரச் சாமான்களை அகற்றவும் அல்லது ஒரு பெரிய படுதாவை கொண்டு மூடி வைக்க வேண்டும். பெரிய பகுதிகளுக்கு ரோலரைப் பயன்படுத்தவும். முதல் கோட் காய்ந்த பிறகு, தவறவிட்ட பகுதிகளை ஆய்வு செய்து, இரண்டாவது கோட் போடுவதற்கு முன் அவற்றையும் அடித்து முடிக்க வேண்டும்.

முதலில் பெயிண்ட் அடிக்க வேண்டிய மொத்த இடம், பெயிண்ட் வகை, வீட்டின் உட்பரப்பு பகுதி, கதவுகள் மற்றும் ஜன்னல்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிடுங்கள். அதன்படி, நீங்கள் எந்த வகையான பெயிண்டைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதை கவனியுங்கள். இது வீண் விரயத்தைத் தவிர்க்கும் மற்றும் பணத்தையும் சேமிக்க முடியும். நீங்கள் அடர் நிற வண்ணத்திலிருந்து வெளிர் நிற வண்ணத்திற்கு மாற்றும்போது பொதுவாக ப்ரைமர் தேவைப்படுகிறது. நீங்கள் அதே வண்ணத்தை அல்லது அடர் நிற வண்ணங்களைத் தேர்வு செய்தால், ப்ரைமர் செலவைத் தவிர்க்கலாம்.

மேற்கூறிய வழிமுறைகளை மனதில் வைத்து அதன்படி செயலாற்றினாலே குறைந்த செலவில் நிறைவான, தரமான பெயிண்ட்ங் வேலையை முடிப்பது எளிது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com