நீங்கள் பர்னம் விளைவால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

Barnum Effect
Barnum Effecthttps://www.calmsage.com

பொதுவாக, இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஆளுமைத்தன்மையை பற்றிய அறிக்கைகள் உண்மையில் தெளிவற்றதாகவும், யாருக்கும் பொருந்தாத வகையிலும் அமைந்திருக்கும். அவை அப்படியே தங்களுக்கும் பொருந்துகிறது என்று மக்கள் நம்பும்போது பர்னம் விளைவு (Barnum Effect) என்பது ஏற்படுகிறது.

பர்னம் விளைவுகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்:

1. ஜோதிடர்களின் கூற்று: ஜோதிடர்கள் பொதுவாக ஒரு ராசிக்காரர்களின் குணத்தைப் பற்றி கூறுவார்கள். எடுத்துக்காட்டாக கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள் என்று சொல்வார்கள். கோடிக்கணக்கான கும்ப ராசிக்காரர்களுக்கு அது பொருந்தாது. சிலர் இந்த கூற்றுப்படி வேறுபட்டு இருக்கலாம். அதேபோல கும்ப ராசி அல்லாத பிற ராசிக்காரர்களும் தன்னுடைய குடும்பத்தின் மீது பற்றுதலோடு இருப்பார்கள். எனவே, இந்தக் கூற்று பொதுவான கூற்று. தனிப்பட்ட நபர்களை பற்றியது அல்ல.

2. ஆளுமை சோதனைகள் (பர்சனாலிட்டி டெஸ்ட்): இணையத்தில் பர்சனாலிட்டி டெஸ்டில் ஒரு நபரைப் பற்றிய பொதுப்படையான கருத்துக்கள் இருக்கும். பொதுவாக நண்பர்களுடன் இருப்பதை விரும்பினாலும் சில சமயம் தனியாக இருக்கவும் விரும்புவீர்கள் என்று ஒரு கூற்று இருந்தால் இது எல்லாருக்குமே பொருந்தக்கூடிய கூற்று.

3. பார்ச்சூன் குக்கிகள்: நீங்கள் ஒரு பார்ச்சூன் குக்கியை திறக்கிறீர்கள். அது திறக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகிறது. இது தெளிவற்ற, ஆனால் எல்லாருக்கும் பொருந்தும் ஒரு கூற்று.

4. உளவியல் கூற்றுகள்: மனவியலாளர்கள் உளவியலாளர்கள் பயன்படுத்தும் ஒரு நுட்பம், உடல் மொழி, தோற்றம் அல்லது வயது போன்ற குறிப்புகளின் அடிப்படையில் ஒருவரை பற்றிய பொதுவான அறிக்கைகளை வெளியிடுவார்கள். அது எல்லாருக்கும் பொருந்தும்படி அமைந்திருக்கும். ஆனால், அவற்றை படிப்பவர்கள் எல்லாம் தனக்குத்தான் சொல்லி இருக்கிறார்கள் என்று நினைக்கும்படி இருக்கும்.

5. ஜோதிடப்பிறப்பு விளக்கப்படங்கள்: ஜோதிடர்கள் ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து வானவியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் ஜாதகத்தை உருவாக்குகிறார்கள். பின்னர் அவர்கள் ஒரு நபரின் ஆளுமை மற்றும் வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய விளக்கங்களை சொல்கிறார்கள். இது பரந்துபட்ட பொதுவான பலன்களாகும். ஆனால். மக்கள் பெரும்பாலும் இந்த பலன்களை துல்லியமாக இருக்கிறது என்று வியந்து போகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் வளர்க்கக் கூடாத மரங்கள் என்னென்ன தெரியுமா?
Barnum Effect

6. சுய முன்னேற்ற புத்தகங்கள்: பல சுய முன்னேற்ற புத்தகங்கள் மனித நடத்தை பற்றிய அறிவுரைகளையும் நுண்ணறிவையும் வழங்குகின்றன. இது பரந்த பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருந்தாலும் இந்தத் தகவல்கள் பொதுவானவை. கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் மற்றும் அறிவுரைகளுடன் வாசகர்கள் தங்களை அடையாளம் கண்டு சிலாகிக்கிறார்கள்.

7. உற்பத்தித்திறன் பயன்பாடுகள் மற்றும் கருவிகள்: இவை பெரும்பாலும் பொதுவான குறிப்புகள் மற்றும் உத்திகளை வழங்குகின்றன. இந்தப் பரிந்துரைகள் வெவ்வேறு வேலை பணிகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு பரந்த அளவில் பொருந்தும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பயனர்கள் இந்தப் பரிந்துரைகளை தங்களுடைய தனிப்பட்ட தொடர்புகளுடன் உணருகிறார்கள்.

எனவே, பொழுதுபோக்கு மற்றும் நம்பிக்கை முதல் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் உற்பத்தி திறன் வரை வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பர்னம் விளைவு எவ்வாறு வெளிப்படும் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் தெளிவாக காட்டுகின்றன. மக்கள் பர்னம் விளைவைப் பற்றி அறிந்து கொண்டு இவை தங்களுக்கானவை அல்ல என்று உணர்ந்து கொண்டு தெளிவு பெற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com