தினமும் வெந்நீர் குடிக்கிறீங்களா? அதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Hot water
Hot water
Updated on

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சுடுதண்ணீர் குடிப்பது உடலுக்கு ரொம்ப நல்லதாகும். பொதுவாகவே ஒருவருக்கு உடல் நிலை மோசமானாலே சுடுதண்ணீர் தான் குடிக்க சொல்வார்கள். அப்படி அந்த சுடுதண்ணீரில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

மருத்துவர்கள் தண்ணீரை கொத்திக்க வைத்து வெந்நீராக குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர்.

அறையின் வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தான் என்றாலும் வெந்நீர் குட்ப்பதால் இன்னும் பல கூடுதல் நன்மைகளை பெற முடியும்.

சுடு தண்ணீர் குடிப்பதால் சாப்பிட்ட உணவு நல்ல செரிமானமாகும். சாப்பிட்ட உணவு, எண்ணெய் உணவு வயிற்ற்குள் சென்று கரைய நேரமாகும். அப்படி இருக்கும் போது சுடுதண்ணீர் குடிப்பதால், அனைத்தும் கரைந்து நல்ல செரிமானமாகும்.

சூடான நீர் காயமடைந்த தசைகளுக்கு ரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை மேம்படுத்துகிறது.

வெந்நீர் செரிமானத்தை தூண்டுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்காமல் விரைவாக உணவு கலோரிகளை கரைக்கும். இதன் மூலம் எடை குறைய அதிக வாய்ப்புள்ளது.

காலையில் எழுந்ததுமே சூடான நீர் குடிப்பது உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவும், அதன் பின் உடற்பயிற்சி செய்தால் மிகவும் நல்லது.

ஒரு நபரின் மைய வெப்பநிலையை உயர்த்தும் அளவுக்கு தண்ணீர் சூடாக இருக்கும் போது வியர்வை ஏற்படலாம். இது துளைகளை சுத்தப்படுத்துவதுடன், வியர்வை மாசுக்களை வெளியிடுகிறது.

சளி மற்றும் நாசி அலர்ஜியால் ஏற்படும் அழுத்தம் சைனஸில் வெப்பட்தை வைப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும், நீராவியை பயன்படுத்தி சைனஸ்களையும் சுத்தம் செய்கிறது.

சரும அழகை பராமரிக்கவும் சுடு தண்ணீர் நல்லது.

ஒரு சூடான கப் தண்ணீரின் அமைதியான விளைவுகள் மக்கள் தங்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நிர்வகிக்க உதவும்.

சுடுநீர் சுழற்சியை அதிகரிக்க ரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. இது தசை தளர்வு மற்றும் வலியை குறைக்க உதவும்.

logo
Kalki Online
kalkionline.com