வளரும் வயதில் உடன் பிறப்பாய் ஒரு சகோதரி இருப்பதால் உண்டாகும் நன்மைகள்!

Advantages of co-born sister
Advantages of co-born sister
Published on

குழந்தைப் பருவத்தில் கூட ஒரு சகோதரி இருப்பது நிஜமாகவே ஒரு வரமாகும். அது தனித்துவம் நிறைந்த ஓர் உற்சாக அனுபவமாகும். உடன் பிறப்புடனான பிணைப்பு ஒருவருக்கு நல்ல பல விலை மதிப்பில்லா பாடங்களைக் கற்பித்து, அவரின் குண நலன்களையும் திறமைகளையும் வளர்க்க உதவும். ஒரு  சகோதரியிடமிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய நல்ல விஷயங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. உணர்ச்சி வசப்பட நேரும் சமயங்களில் சகோதரி, உடன் பிறந்த குழந்தைகளுக்கு புரிதலின் முக்கியத்துவத்தை உணரச் செய்து கஷ்டமான நேரங்களில் அதைக் கடப்பதற்கு அவர்களுக்கு உதவி புரிவாள்.

2. ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு உண்டாகும்போது சகோதரி பயனுள்ள வழிகளைக் கற்றுக் கொடுத்து முரண்பாடுகளை சமயோசிதமாகவும் அமைதியான முறையிலும் தீர்த்து வைக்க முற்படுவாள். பொறுமையையும் பேசி முடிவெடுக்கும் திறனையும் கற்றுக் கொடுக்கவும் செய்வாள் சகோதரி.

3. சகோதரியுடன் வளர்வது தனக்கான தனியிடம், பொம்மைகள், அறிவுத்திறன் போன்றவற்றை பகிர்ந்துகொள்ளும் குணத்தை வளர்க்க உதவும். அதன் மூலம் ஒற்றுமை மற்றும் குழுவாக செயல் புரிந்து திறமைகளை வளரச் செய்யலாம்.

4. ஒரு குழந்தையுடன் நட்புடன் பழகுவதில் அதன் சகோதரியே முதலிடம் வகிப்பாள். அக்குழந்தைக்கு விசுவாசம், நட்பு, நம்பிக்கை போன்ற நற்குணங்களின் உயர்வை கற்றுத் தருவாள். இந்த குணங்கள் குழந்தைப் பருவத்திற்கு மட்டுமின்றி, வளர்ந்த பின்பும் நிலைத்து நின்று நல்ல முறையில் வழி நடத்தும்.

5. சகோதரிகள் அவர்களின் தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை சுதந்திர உணர்வோடு பகிர்ந்து கொண்டு அதன் வாயிலாக உறுதித் தன்மையுடன் ஒருவரின் பிரத்யேக குணங்கள் மற்றும் எண்ணங்களை சுயமாக வெளியிட முடியும்.

இதையும் படியுங்கள்:
ஓயாத தலைப் பொடுகை ஒழித்துக்கட்ட சில இயற்கை ஆரோக்கிய வழிகள்!
Advantages of co-born sister

6. தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன், சகோதரி உடன் பிறந்த குழந்தை ஸ்டைலான தோற்றமுடன் வலம் வரவும் கற்றுக் கொடுப்பாள். தனது தோற்றத்தை அழகுடன் வெளிப்படுத்துவதில் கிடைக்கும் மகிழ்ச்சியையும் உணரச் செய்வாள். தனக்கான ஆடை அணிகலன்களை தானே தேர்வு செய்து கொள்வதற்கும் பயிற்சி அளிப்பாள்.

7. கடுமையான சவால்களைச் சந்திக்க நேரும்போது, அதை வெற்றிகரமாகக் கடந்து வரவும், அதிலிருந்து  மீண்டு வந்தபின் மறுபடியும் மகிழ்ச்சியையும் உறுதியான மன நிலையையும் கொண்டு வர சகோதரி மிக்க பலமாக இருந்து உதவி புரிவாள்.

8. ஒரு சகோதரிக்கும் அவள் உடன் பிறந்தவருக்குமான பிணைப்பு நிபந்தனையற்ற அன்பையும் ஒருவரை ஒருவர் முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் பாங்கையும் இருவர் மனதிற்குள்ளும் ஆழப் பதிய வைக்கும். மற்றவர்களை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் பண்பையும் கற்றுக்கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com