நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் தெரியுமா?

நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் தெரியுமா?
Published on

நம் நாட்டில் நெற்றியில் குங்குமம் வைப்பது பாரம்பரிய முறையாகும். நம்மில் பலர் இன்று பொட்டு வைப்பதையே மறந்து விட்டனர். பெண்கள் பலருக்கும் பொட்டு என்ற குங்குமம் இட்டு கொள்வதின் அர்த்தம் தெரியாமல் இருக்கின்றனர். மங்கலச் சின்னமாகவும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் தரும் விதமாக பொட்டு வைப்பது கடைப்பிடிக்கப்படுகிறது.

இரு புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைப்பதால் நினைவாற்றல், சிந்திக்கும் திறன் மேம்படும் என மருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது. அங்கு அழுத்தம் ஏற்படும் வகையில் பொட்டு வைக்கும் போது மூளையின் செயல்திறன் தூண்டப்படுவதாக தெரிய வந்துள்ளது. மஞ்சள், சுண்ணாம்பு, படிகாரம், ஆகியவற்றிற்கு எதிர்மறை சக்திகளை விலக்கும் ஆற்றல் இருப்பதன் அடிப்படையில் அவற்றால் தயாரிக்கப்பட்ட குங்குமம் கோயில்களில் வழங்கப்படுகிறது.

இந்திய யோகக் கலை இரு புருவ மத்தியை 'ஆக்ஞா சக்கரம்' என்றும் அப்பகுதியிலிருந்து எலக்ட்ரோ மேக்னடிஸம் எனும் மின்காந்த சக்தி வெளிப்படுகிறது என கூறுகிறது. பொட்டு வைப்பதால் அப்பகுதி குளிர்ச்சி அடைந்து நேர்மறை எண்ணங்கள் உருவாக உதவி புரிகிறது. அதன்மூலம் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

திருமணமான பெண்கள் வெற்றி வகிட்டில் பொட்டு வைத்துக் கொள்வது கலாச்சார முறையிலும், உடல் ஆரோக்கியம் சம்பந்தமாகவும் நன்மைகளைக் தருகிறது. அதாவது பெண்கள் நெற்றி வகிட்டை விரல்களால் தொடுவதால், அடி வயிற்றில் அமைந்துள்ள பாலியல் சுரப்பி நன்றாக இயங்கி கர்ப்பப்பை வலுப்பெறுவதாக குறிப்பிடுகிறார்கள். இதன் காரணமாகவே மணமான பெண்கள் நெற்றி விட்டில் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும் என வலியுறுத்தி சொல்கின்றனர்.

சீமந்தம், வளைகாப்பு நிகழ்வுகளில் அனைவரும் வந்து ஆசிர்வதிப்பது கர்ப்பப்பை செயல்பாடு தூண்டப்பட்டு குறைப்பிரசவம், பெண் மன அழுத்தமின்றி சந்தோஷமாக இருத்தல் போன்றவை நிகழ்கிறது.

கருத்தரித்த ஏழாவது, ஒன்பதாவது மாதத்தில் செய்வதால் தாய் சந்தோஷமாக இருப்பதால் குழந்தையும் எவ்வித குறையுமின்றி ஆரோக்யமாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோதிர விரலை பயன்படுத்தி நெற்றியில் குங்குமம் இட வேண்டும்.

குங்குமத்தை இடது கையில் வைத்துக் கொண்டு வலது கை விரலால் தொட்டு வைப்பது கூடாது.

வலது கை கட்டை விரல் மற்றும் மோதிர விரலால் குங்குமத்தை வைத்துக் கொள்வது மங்கலத்தையும், ஆரோக்யத்தையும் தரும்.

கட்டை விரலால் குங்குமம் இடுவது மனதில் துணிச்சலை தரும்.

ஆள்காட்டி விரலால் குங்குமம் இடுவது நிர்வாகத் திறமையை அதிகரிக்கும்.

நடுவிரல் மூலம் குங்குமம் இடுவது ஆயுளை அதிகரிக்கும்.

நம் வசதிக்காக பல வண்ணங்களில் ஸ்டிக்கர் பொட்டுகளை வைத்துக் கொண்டாலும், நல்ல நாள், பண்டிகைகளின் போது தவறாமல் குங்குமம் வைப்பது ஆரோக்யத்தைக் காக்கும் என்பதை மறவாமல் இருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com