மகிமை மிகு தர்ப்பைப் பூ!

 மகிமை மிகு தர்ப்பைப் பூ!

தர்ப்பைப் புல் ஒரு புண்ணியம் நிறைந்த பொருளாகும்..!

எப்படி என்று கேட்கிறீர்களா..? தர்ப்பைப் புல் புண்ணிய பூமியை தவிர வேறெங்கும் வளராது என்பார்கள்.. மேலும் தர்ப்பைப் புல் தோஷங்களை நீக்கும் தன்மை பெற்றுள்ளது.. ஆகவே தான் இது புண்ணியமான பொருளாக பார்க்கப்படுகின்றது..!

மேலும் தூய்மையின் அடையாளமாக கருதப்படும் தர்ப்பைப் புல்லை சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவு பொருள்களிலும், குடிநீரிலும் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தர்ப்பைப் புல்லை கொண்டு தயாரிக்கப்பட்ட பாய் ஆன்மிகத்திலும், ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது..!

அதோடு நாம் இறைவனுக்கு பூஜை செய்யும் போது, பூஜையில் எந்தவித தோஷங்களும், குறைகளும் இல்லாமல் நிறைவானதாக இருக்க பூஜை நேரங்களில் இந்த தர்ப்பைப் புல் பாயினை விரிப்பாக பயன்படுத்தலாம்..!

நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பொழுது கைவிரலில் தர்ப்பைப் புல்லை மோதிரமாக அணிந்திருப்பதற்கு காரணமும் அதில் உள்ள புண்ணியம் தான்..!

எவ்வளவு தான் நவீனமான பிளாஸ்டிக் பாய் மற்றும் விரிப்புகள் வந்தாலும் அத்தனையும், இந்த ஆரோக்கியம் தரும் தர்ப்பைப் புல் பாய்க்கு ஈடாகாது..!

புனிதமும்.. புண்ணியமும் நிறைந்த தர்ப்பைப் புல் பாயினால்

கிடைக்கும் நன்மைகள் :

தர்ப்பைப் புல் பாய் ஆசனம் மற்றும் யோகா செய்ய சிறந்த விரிப்பாகும்..

தர்ப்பைப் புல் பாயை பூஜை அறை விரிப்பாக விரித்து பூஜை செய்வதால் தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்தும்..

தர்ப்பைப் புல் பாயில் அமர்ந்தால் உடலில் உள்ள வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்..

தர்ப்பைப் புல் பாயில் இருந்து வெளிப்படும் தெய்வீக ஆற்றலானது நம் வீட்டை தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டிகளில் இருந்து பாதுகாக்கும்..

தர்ப்பை பாயில் தூங்கும் பொழுது உடல் வெப்பம் குறைந்து மனதிற்கு அமைதி கிடைக்கும்..

உடல் வலி, தூக்கமின்மை போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும்..

கெட்ட கனவுகள் வருவதை தடுத்து மன குழப்பங்களை நீக்கும்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com