AC ஓடும்போது சீலிங் ஃபேன் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா? 

Benefits of using a ceiling fan when the AC is running.
Benefits of using a ceiling fan when the AC is running.

சுட்டெரிக்கும் சூரியன் தன் கோரத்தாண்டவத்தை ஆடும் கோடை காலத்தில், குளுகுளுவென இருக்க நம்மில் பலர் ஏர் கண்டிஷனரைத்தான்  நம்பியிருக்கிறோம். ஏசி பயன்படுத்தும் போது அதிக மின்கட்டணம் வருவது பலருக்கு கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. ஆனால் ஏசி ஓடும்போது கூடவே மின்விசிறியையும் இயக்கினால், பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. சரி வாருங்கள் அது பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். 

ஏசி ஓடும்போது சீலிங் ஃபேனை இயக்குவதால் கிடைக்கும் நன்மைகள்:

வேகமான காட்டு சுழற்சி: ஏசி இயங்கும்போது சீலிங் ஃபேனை பயன்படுத்துவதால் அறையில் காற்றின் சுழற்சி அதிகரிக்கிறது. இதனால் குளிர்ந்த காற்று அறை முழுவதும் வேகமாகப் பரப்பப்படுவதால், அறையின் வெப்பநிலை வேகமாகக் குறைந்து ஏசி மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது. 

அதிக கூலிங் திறன்: சீலிங் ஃபேன் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் ஏசி சிஸ்டத்தின் குளிரூட்டும் திறனை அதிகரிக்கலாம். ஃபேன் ஓடும்போது ஏசியின் குளிர்ந்த காற்று ஃபேனில் பட்டு நேரடியாக அறையில் இருப்பவர்கள் மீது படுகிறது. இதன் மூலமாக அதிக குளிர்ச்சியை நீங்கள் விரைவாக உணர முடியும். மேலும் ஏசி தெர்மோஸ்டாட் குறிப்பிட்ட வெப்பநிலையை விரைவில் இழப்பது தடுக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய ஏசி யூனிட் குறைவாகவே வேலை செய்கிறது.

ஆற்றல் சேமிப்பு: உங்கள் ஏசியுடன் சேர்த்து சீலிங் ஃபேன் பயன்படுத்தும் போது குறிப்பிடத்தக்க ஆற்றலை நீங்கள் சேமிக்கலாம். மேலே குறிப்பிட்டது போல ஏசி தெர்மோஸ்டாட் அதன் வெப்பத்தை இழக்காதபோது, குறைந்த ஆற்றலே பயன்படுத்தப்படுகிறது. இது ஒட்டுமொத்த ஏசி அமைப்பின் சுமையை கணிசமாகக் குறைத்து, ஆற்றல் சேமிப்புக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக மின் கட்டணத்தின் அளவு குறைகிறது.

இதையும் படியுங்கள்:
1 Hour Rule: உங்களை கோடீஸ்வரராக மாற்றும் தந்திரம்!
Benefits of using a ceiling fan when the AC is running.

காற்றின் தரம் அதிகரிக்கும்: ஏசி இயங்கிக் கொண்டிருக்கும்போது மின்விசிறியை பயன்படுத்தினால், அது அறையில் எல்லா மூலைகளுக்கும் காற்றை நகர்த்துகிறது. இதனால் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் காற்று சிதறுவதால், தூசி, நாற்றங்கள் போன்றவை விரைவில் நீங்குகிறது. 

குறைந்த ஏசி தேய்மானம்: ஏசி ஓடும்போது சீலிங் ஃபேன் பயன்படுத்தினால் ஏசி யூனிட்டின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். ஏசியின் பணிச்சுமையைக் குறைப்பது மூலம், கம்ப்ரஸர், பேன் மோட்டார் மற்றும் பிற பாகங்களில்ன் தேய்மானம் குறைகிறது. இது பழுது மற்றும் பராமரிப்பு தேவைகளைக் குறைத்து, குளிரூட்டும் அமைப்பின் ஒட்டுமொத்த ஆயுளையும் நீட்டித்து, பணத்தை சேமிக்க உதவுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com