
காதல் உறவு அல்லது திருமண உறவு என்பது ஒவ்வொரு நபருக்கும் மிகவும் முக்கியமானதாகும். இன்றைய காலத்தில் இவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. எனவே நீண்ட காலம் உங்களுடன் பயணிக்கப் போகும் உங்களுக்கான துணையைத் தேர்வு செய்யும் போது கவனமாக இருங்கள். குறிப்பாக ஆண்கள் தங்களுக்கான துணையைத் தேர்வு செய்யும்போது பெண்களின் குண நலன்களைக் கொஞ்சம் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. ஏனெனில் ஒரு பெண்ணின் மோசமான குணம் உங்களது சந்ததியையே கெடுத்துவிடும். அந்த வகையில், உங்களது வாழ்க்கைத் துணை அல்லது காதலியிடம் இந்த 5 குணங்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
1. தேவையில்லாத கோபம்: என்னதான் கோபப்படுவது மனித இயல்பாக இருந்தாலும், ஒருவர் தேவை இல்லாமல் அளவுக்கு அதிகமாகக் கோபப்படும்போது அவர்களைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கை அதனால் பாதிக்கப்படுகிறது. எனவே உங்கள் காதலி எதற்கெடுத்தாலும் கோபப்பட்டால், நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். இதனால் உங்கள் மன அமைதியும் வாழ்க்கையும் மோசமாகிவிடும் வாய்ப்புள்ளது.
2. அதிக பொய்: இயல்பாகவே சில பெண்கள் தங்களின் சுயலாபத்திற்காக பொய் பேசுவதாக சொல்லப்படுகிறது. இந்த பழக்கம் அவர்களுக்கு குழந்தை பருவத்திலிருந்து தொடங்கி, சில சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க அதிகமாக பொய் பேசும் நிலைமைக்கு தள்ளி விடுகிறது. இத்தகைய பெண்களால், அவர்களின் பார்ட்னருக்கு அதிகப்படியான பிரச்சனை ஏற்படுமாம்.
3. பேராசை: பேராசை குணம் பெரும்பாலானவர்களிடம் காணப்பட்டாலும், பணத்தின் மீதான ஆசை பெண்களுக்கு அதிகமாகவே உள்ளதாம். இது மூலமாக ஆண்களை விட பெண்களுக்கு பேராசை அதிகம் என சொல்லப்படுகிறது. நகை, உடை, பணம் போன்றவற்றில் ஒரு பெண்ணின் மனம் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. இப்படி பணத்தின் மீது அதிக பற்று கொண்ட பெண்களால், ஆண்கள் தன் நிம்மதியை இழக்கும் அபாயம் உள்ளது.
4. அமைதியைக் கெடுத்தல்: எப்போதும் தேவையில்லாமல் ஏதாவது பேசிக்கொண்டு, சண்டை சச்சரவுகளை உருவாக்கும் நபருடன் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. ஒரு பெண்ணின் இத்தகைய நடத்தை, அந்தத் தலைமுறையையே பாதிக்குமாம். ஏனெனில் இத்தகைய பெண்களால் அவர்களின் குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத் தர முடியாது என சொல்லப்படுகிறது.
5. சிந்தித்துப் பேசாமை: ஒரு பெண் தனது பேச்சை கட்டுப்படுத்தாமல், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுபவராக இருந்தால், அவர்களை சுற்றியுள்ள அனைவருமே பாதிக்கப்படுவார்களாம். இவர்களுடன் நீண்ட காலம் பயணிப்பது மிகவும் கடினமானது. இவர்களால் உறவில் பெரும் பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாத நபர்களிடமிருந்து விலகுவதே நல்லது.