"இது தான் புது ட்ரெண்டு" நீங்கள் மார்டனாக இருக்க இதை செய்தால் போதும்!

Trends
TrendsIntel
Published on

சமீபகாலமாகவே ட்ரெண்ட் என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டு வருகிறோம். அது என்ன ட்ரெண்ட் அப்படி என்றால் தற்போதைய கலாச்சார லெவல் என்று அர்த்தம். 90ஸ் கால ட்ரெண்ட், 2K கால ட்ரெண்ட் என வகை பிரிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக இருப்பதை ஒரு வகையாகவும், மார்டனாக இருப்பதை ஒரு வகையாவும் கூறுகின்றனர். அப்படி தற்போதைய காலகட்டத்தின் ட்ரெண்ட் தான் என்ன. அதை நாமலும் ஃபாலோ செய்யலாமே என்று தானே நினைக்கிறீர்கள். அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முடிக்கு கலர் அடிப்பது:

Warmed hair colours
Warmed hair coloursIntel

பெண்ணுக்கு அழகு சேர்ப்பது தலை முடியாகும். அப்படிப்பட்ட முடியை பெண்கள் அவர்களின் உடை, பாவனைக்கு ஏற்றவாறு வெட்டி கொள்வார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது ஹேர் கலரிங் என்பது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. பல பெண்கள் தற்போது தலைமுடியை கலரிங் செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஒரு காலத்தில் வெள்ளை முடி வந்தால் டை அடிப்பார்கள். தற்போது நீலம், மஞ்சள் என வேண்டுமென்ற வண்ணத்தில் தலை முடியை மாற்றி கொள்ள முடியும்.

முகத்தில் நகைகள்:

Face and body jewellery
Face and body jewelleryIntel

பெண்களுக்கு மேலும் அழகு சேர்ப்பதில் நகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அப்படி உடலில் நகை அணிவதை தொடர்ந்து, முகத்தில், புருவத்தில் நகைகள், கற்கள் அணிந்து கொள்வது புது ட்ரெண்டாகி வருகிறது.

கண்களில் அதிக லைனர்:

Lots of liner
Lots of linerIntel

பெண்களின் முக அழகுக்கு கண்மை ரொம்ப முக்கியமானது. எதிரில் இருக்கும் நபரை சட்டென ஈர்த்து விடும் தன்மை கண்மைக்கு உண்டு. முந்தைய காலத்திலேயே பெண்கள் கண்மை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது ஐ லைனர், காஜல், மஸ்காரா என கண்களுக்கே வெரைட்டி வெரைட்டியான கண்மைகள் வந்துள்ளது. கண்களில் அதிக மையை தீட்டுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

சிறிய புருவம்:

less brows
less browsIntel

முகத்தில் புருவம் இல்லையென்றால் நாம் எப்படி இருப்போம் என்று தெரியாது. அனைவருக்கும் புருவம் ஒரு தனி அழகு தான். பலரும் புருவத்தை ட்ரிம் செய்து வருகின்றனர். சிறிய புருவம் வைத்து கொள்வது தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com