உடல் எடையைக் குறைக்கும் ப்ளூபெர்ரி!

Blueberries for weight loss.
Blueberries for weight loss.
Published on

நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? நீண்ட நாட்களாக முயற்சித்தும் எதுவும் பலனளிக்கவில்லையா? தினமும் ப்ளூபெர்ரி சாப்பிடுங்கள் போதும். இது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளையும் தருகிறது.

உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை வழங்கும் ப்ளூபெர்ரி ஒரு பெர்ரி வகையைச் சேர்ந்த பழமாகும். இது உடல் எடையைக் குறைப்பதில் மிகப்பெரும் பங்காற்றும் ஒரு பழமாகும். இந்த அற்புதப் பழத்தை உடல் எடை குறைப்புக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

‘நியூட்ரியன்ட்ஸ்’ என்ற ஆங்கில இதழில் வெளியான அறிக்கை, ‘ஒரு நாளைக்கு 25 ப்ளூபெர்ரி பழங்களை சாப்பிடுவது ஒரு முழு பெரிய நெல்லிக்காயை சாப்பிடுவதற்கு சமம்’ என்று சொல்கிறது. அதேபோல, இந்தப் பழங்களை உடற்பயிற்சி செய்த பிறகு எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும் எனவும் சொல்லப்படுகிறது.

ப்ளூபெர்ரி பழங்கள் நமது உடல் கொழுப்பைக் கரைத்து உடல் எடையையும் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதிலும் குறிப்பாக, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கு ப்ளூபெர்ரி பெரிதும் கைகொடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை தினசரி உண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சமப்படும். எனவே, எடை குறைப்பதில் ப்ளூபெர்ரி பழங்கள் ஒரு சிறந்த தேர்வு எனலாம். குறைந்த இனிப்பு, கொழுப்பு இல்லாத இந்த ப்ளூபெர்ரி பழங்கள் பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் ஏராளமான வைட்டமின்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

ப்ளூபெர்ரி பழங்களை ஒருவர் அப்படியே சாப்பிடலாம். அல்லது காலை உணவாக ஓட்ஸ் கலவையிலும் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக, காலை உணவுகளில் இதை சேர்த்துக் கொள்வது நல்லது. பலர் இந்த ப்ளூபெர்ரி பழங்களை சாலட்டில் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆப்பிள், முட்டைகோஸ், வாழைப்பழம், சில பச்சை காய்கறிகளுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஸ்மூத்தியாகவும் இதைக் குடிக்கலாம். இது உடல் வளர்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவி புரிகிறது.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான ப்ளூபெர்ரியை சாப்பிடலாம். உணவிலிருந்து கிடைக்கும் கலோரியை குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக ப்ளூபெர்ரி இருக்கும். இதில் குறைந்த கலோரி இருந்தாலும் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் உடல் எடை குறைப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது.

எனவே, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், தம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புபவர்களும், தினசரி ப்ளூபெர்ரி பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமே! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com