பூமிக்குள் மறைத்த விதை!

கலைஞர் மு.கருணாநிதி
கலைஞர் மு.கருணாநிதி
Published on

முன்னாள் முதலமைச்சர்  கலைஞர் மு.கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று. தமிழுக்கும் தமிழகத்துக்கும் அவர் செய்த நல்லனவற்றை போற்றும் விதமாக அவரது நினைவு தினத்தில் அவர் சொல்லிச் சென்ற சில தத்துவ வரிகளை இந்தப் பதிவில் காண்போம்.

* புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும்.

* வீரன் சாவதே இல்லை; கோழை வாழ்வதே இல்லை.

* தனிமை போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப் போல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.

* துணிவிருந்தால் துக்கம் இல்லை; துணிவில்லாதவனுக்கு தூக்கம் இல்லை.

* பகைவனுக்கு அருளிடலாம், ஆனால் துரோகிகளுக்கு அருள்வது ஆபத்தானது. உலகில் இன்று துரோகிகளே அதிகம்.

* ‘முடியுமா நம்மால்?’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். ‘முடித்தே தீருவோம்’ என்பது வெற்றிக்கான தொடக்கம்.

* உண்மையை மறைக்க முனைவது விதையை பூமிக்குள் மறைப்பது போலதான்.

* இழிவு செய்யும் நண்பர்களை விட எதிர்த்து நிற்கும் பகைவர்கள் எவ்வளவோ மேல்.

* ஆசைகள் சிறகு ஆகலாம். அதற்காக கால்களை இழந்து விட்டு பறந்தால் பூமிக்கு திரும்ப முடியாது.

* அனுபவம் ஒரு பள்ளிக்கூடம். ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை.

* உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள். அந்த உண்மையை புரியாததன் பின்னாலும் ஐந்து பேர் செல்வார்கள்.

இதையும் படியுங்கள்:
செரிமான பிரச்னைக்கு சிறந்த மருந்தாகும் ஜாதிக்காய்!
கலைஞர் மு.கருணாநிதி

* ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் அதைக் கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அறிவொளி பெற்ற ஒரு பெண்ணாலும் அது முடியும்.

* பாராட்டும் புகழும் குவியும்போது குட்டையான வாசலுக்குள் குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும்.

* ஒளியினால்தான் நமது நிழலின் வடிவம் நமக்குத் தெரிகிறது. சோதனைதான் நமது நெஞ்சின் வலிமையை நமக்குப் புரிய வைக்கிறது.

* சிரிக்கத் தெரிந்த மனிதன்தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com