
நம்ம செல்ல குட்டி இளவரசிகளுக்கும் சிங்க குட்டிகளுக்கும் என்ன வேறுபாடு என்று பார்க்கலாமா... சும்மா ஜாலிக்குதான்!
நம்ம பாய்ஸ் கம்மி மார்க் வாங்கினால் கூட கூலா கெத்தா இருப்பார்கள். ஆனால், நம்ம இளவரசிகளோ 100 மார்க் வாங்கினால் கூட முகத்தை தூக்கி வைத்து கொண்டு 'உம்' என்று சோகத்தோடு இருப்பார்கள்.
நம்ம heroes க்கு வாரத்துக்கு இரண்டு டிரெஸ் இருந்தாலே போதும். ஆனால் girls ஒரு நாளைக்கு இரண்டு தடவை டிரெஸ் மாற்றுவார்கள்.
Boys, discipline-காக முடியை ட்ரிம் செய்வார்கள். ஆனால், இளவரசிகளோ அழகுக்காக முடியை ட்ரிம் செய்வார்கள்.
Boys ஒரு கிலாஸ் ஜுஸில் 4 straw போட்டு நான்கு பேர் குடிப்பார்கள். ஆனால் girls நான்கு கிலாஸ் ஜுஸ் வாங்கி தனித்தனியா straw வை போட்டுதான் குடிப்பார்கள்.
Boys காலுக்கேற்ற செருப்பை போடுவார்கள். நம்ம இளவரசிகள் டிரெஸ்ஸிற்கு மேட்சா செருப்பை போடுவார்கள்.
Boys, டாக்டர் இன்ஜக்ஷனை உடம்பில் குத்தும் போது கூட கத்த மாட்டார்கள். ஆனால் girls-ஓ இன்ஜக்ஷனை பார்த்த உடனேயே 'ஐயோ', 'அம்மா' என்று அலறுவார்கள்.
Boys எத்தனை சோகமாக இருந்தாலும் யார் என்ன சொன்னாலும் சீக்கிரத்தில் அழ மாட்டார்கள். இளவரசிகளுக்கோ யாராவது கொஞ்சம் எதாவது சொன்னாலே போதும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
Boys பொதுவாக அடுத்தவர்களுடைய பிறந்த நாளையோ அல்லது முக்கியமான நாளையோ நினைவில் வைத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் நம்ம girls கரெக்டா ஞாபமாக நினைவில் வைத்து கொண்டு விஷ் செய்வார்கள்.
Boys கீழே விழுந்தால் கூட விழாதது போல் நடிப்பார்கள். Girls-ஓ கொஞ்சம் தடுக்கினாலே ஜோராக கத்தி விடுவார்கள்.
Boys பசியை கொஞ்சம் கூட பொறுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் girls கூடியவரை பொறுத்து கொள்வார்கள்.
Boys எங்கேயும் யாரிருந்தாலும் யோசிக்காமல் சும்மா கையால சாப்பாட்டை எடுத்து சாப்பிடுவார்கள். Girls அப்படி இல்லை, அடுத்தவர்கள் எதிரில் சாப்பாட்டை ஸ்பூனால் கொரிப்பார்கள்.
Boys நடந்த ஒரு கெட்ட சம்பவத்தையோ அல்லது சண்டையையோ உடனே மறந்து விடுவார்கள். ஆனால் girls எளிதில் மறக்க மாட்டார்கள்.
Boys சீக்கிரத்தில் emotional ஆக மாட்டார்கள். ஆனால் girls க்கு emotional feelings அதிகமாக இருக்கும்.
எது எப்படியோ boys and girls, உங்கள் இரண்டு பேரையுமே சரி சமமாக அன்போடும் பாசத்தோடும் அரவணைக்க உங்களுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
Boys n Girls, ஒரு சிறிய வேண்டுகோள்...
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுதவில்லை.... Just for fun ஓகேவா ஃபிரெண்ட்ஸ்?