பித்தளை பாத்திரங்கள் பளபளக்க இத செஞ்சா போதும்! 

Brass utensils
Brass utensils

பித்தளை பாத்திரங்களை வாங்கி வெகு நாட்களாக வீட்டிலேயே வைத்திருக்கிறீர்களா? அதன் நிறம் பழைய பாத்திரம் போல மாறிவிட்டதா? இனி கவலை வேண்டாம் பித்தளை பாத்திரங்கள் நீங்கள் புதிதாக வாங்கும் போது எப்படி இருந்ததோ அதேபோல எளிதாக மாற்றலாம். இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றி பித்தளைப் பாத்திரங்களை பளிச்சென மாற்றலாம். 

  1. முதலில் ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 5 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, பித்தளை பாத்திரங்கள் தேய்த்து கழுவினால், பாத்திரங்கள் அனைத்தும் பளபளவென மாறிவிடும். 

  2. அதேபோல 5 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு மற்றும் 3 ஸ்பூன் உப்பு சேர்த்து இந்தக் கலவையை பித்தளை பாத்திரங்களைக் கழுவ பயன்படுத்துங்கள். எவ்வித கடினமும் இன்றி உங்கள் பாத்திரங்கள் புதிது போல மாறிவிடும். 

  3. உங்கள் வீட்டில் நிச்சயமாக அரிசி மாவு இருக்கும், அதில் கொஞ்சமா எடுத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையைப் பயன்படுத்தி பித்தளைப் பாத்திரங்களைத் தேய்த்தால், அதன் மேல் உள்ள பச்சை நிறத்திலான அழுக்குகள் அனைத்துமே நீங்கிவிடும். 

  4. எலுமிச்சை சாறு இல்லையென்றால் வினிகர் பயன்படுத்தி அதில் பேக்கிங் சோடாவை கலந்தும் பித்தளைப் பாத்திரங்களை தேய்த்து கழுவினால், உங்கள் பழைய பித்தளை பாத்திரங்கள் புதுப் பாத்திரங்களாக மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலை போடுவதற்கு இதுதான் காரணம்... அவரே சொன்ன தகவல்!
Brass utensils

இப்படி உங்களிடம் எலுமிச்சை சாறு மற்றும் இருந்தால் போதும் அதில் பல கலவைகளை உருவாக்கி பித்தளைப் பாத்திரங்களை எளிதாக புதிது போல மாற்றலாம். எனவே இந்த முறைகளைப் பின்பற்றி உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரங்கள் அனைத்தையும் புதிது போல ஜொலிக்க வையுங்கள். மேலும் பித்தளைப் பாத்திரங்கள் எளிதில் கரை பிடிக்காமல் இருக்க அவற்றை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டியது அவசியம். மேலும் அவ்வப்போது அவற்றை நீங்கள் பயன்படுத்தி வந்தால், விரைவில் பழைய பாத்திரமாக மாறாமல் இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com