காதுக்குள் பூச்சி போய்விட்டால் இத மட்டும் செஞ்சிடாதீங்க! 

Bug goes into the ear.
Bug goes into the ear.
Published on

நமது காதுக்குள் பூச்சி அவ்வளவு எளிதாக சென்றுவிடாது. ஆனால் சில தவிர்க்க முடியாத தருணங்களில் பூச்சி, எறும்பு போன்றவை காதுக்குள்ளே சென்று தொந்தரவு செய்யும் வாய்ப்புள்ளது. அத்தகைய தருணங்களில் என்ன செய்யலாம் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 

பெரும்பாலும் நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது தான் காதுக்குள்ளே பூச்சி சென்றுவிடும் வாய்ப்புள்ளது. அப்படி ஏதாவது சென்று விட்டால் உடனடியாக அலறியடித்து காதை ஆட்டுவது, உள்ளே குச்சி அல்லது பின் வைத்து குத்துவது போன்றவற்றை அனைவருமே செய்வது வழக்கம். ஆனால் இப்படி செய்வது பெரும் ஆபத்தில் முடியலாம். 

காதின் உள்ளே பூச்சி சென்றுவிட்டால் மூர்க்கத்தனமாக எதையும் முயற்சிக்காதீர்கள். முதலில் அதை சாகடிக்க முயற்சிக்க வேண்டும். எனவே காதினுள்ளே திரவத்தை நிரப்பி பூச்சியை சாகடிக்கலாம். இதற்கு உப்பு கரைசல் அல்லது எண்ணெயை பயன்படுத்துவது நல்லது. ஒருபோதும் வெறும் தண்ணீரை மட்டும் காதின் உள்ளே ஊற்றாதீர்கள்.

தண்ணீரில் பூச்சி வாழ்வதற்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். அதே நேரம் தண்ணீரால் காதில் தொற்று பாதிப்புகள் ஏற்படலாம். எனவே தண்ணீருக்கு பதிலாக உப்பு கரைசல் அல்லது எண்ணெயை ஊற்றும்போது, பூச்சிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துவிடும். அல்லது சில பூச்சிகள் தான் இறப்பதைத் தவிர்க்க காதை விட்டு உடனடியாக வெளியே வந்துவிடும். 

இதையும் படியுங்கள்:
அர்ப்பணிப்புடன் வேலை செய்தால் நிச்சயம் வெற்றிதான்!
Bug goes into the ear.

அடுத்ததாக, காதில் திரவத்தை நிரப்பியும் பூச்சி வெளியே வரவில்லை என்றால், அது உள்ளே உயிருடன் இருக்கும் பட்சத்தில், அதன் உடல் பாகங்களை குச்சியைக் கொண்டோ, வெறும் கையாலையோ பிடித்து இழுக்கக் கூடாது. அப்படி செய்யும்போது பூச்சி தப்பிப்பதற்கு காதின் உள்ளே கடிக்கும் வாய்ப்புள்ளது. அதையும் மீறி வெளியே எடுக்க முயற்சித்தால் அதன் தலை துண்டாகி காதிலேயே மாட்டிக் கொள்ளும். ஒருவேளை பூச்சி செவி பறையை கடித்திருந்தால், செவிப்பறை கிழிந்து பிரச்சனையை மேலும் மோசமாக்கிவிடும். 

எனவே உங்கள் காதுக்குள்ளே எப்போதாவது பூச்சி சென்றுவிட்டால், முதல் வேலையாக அதை எப்படி உள்ளேயே கொல்வது என யோசித்து செயல்படுங்கள். அதன் பிறகு அதை எப்படி வெளியே எடுப்பது என யோசிக்கலாம். நீங்களாகவே எதையும் முயற்சித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். உங்களால் முடியவில்லை எனும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com