இன்டக் ஷன் ஸ்டவ் வாங்கறீங்களா? பயன்படுத்த, பராமரிக்க சில டிப்ஸ்கள்.

இன்டக் ஷன் ஸ்டவ் வாங்கறீங்களா? பயன்படுத்த, பராமரிக்க சில டிப்ஸ்கள்.
Published on

ன்டக் ஷன் வாங்கி வந்தவுடனேயே கடைகளில் சொல்லிக் கொடுத்த இரண்டொரு அறிவுரைகளுடன் அதனைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றோம் ஆனால் அந்த அடுப்புடன் கொடுக்கப்பட்டுள்ள ‘உபயோகிக்கும் முறை’ என்ற தகவலைத் தெளிவாகப் படித்துப் புரிந்துகொண்டு பயன்படுத்தினால் பராமரிக்க எளிதாக இருக்கும். இதோ மேலும் சில குறிப்புகள்.

முறையான மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

டுப்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து மிக்ஸி, கியாஸ் அடுப்பு என்று இரண்டு பக்கமும் நெரிசலாக வைத்துக்கொள்ளாமல், சற்றே இடவசதியோடு இருக்க வேண்டும்.

டுப்பை ‘ஆன்’ செய்தவுடன் பொதுவாக ஒரு டெம்ப்ரேச்சர் ஒளிரும். (உ-ம்) 1800 என்று. அதனை அப்படியே வைத்து சமைக்கக் கூடாது. பால், தண்ணீர், சூப், அரிசி என்று என்ன சமைக்கப் போகிறோமோ அதற்குரிய பட்டனை உபயோகப்படுத்தி சமைக்க வேண்டும்.

பாலோ, சாம்பாரோ பொங்கி வழிந்துவிட்டால் உடனே தண்ணீர்  கொண்டு கழுவி விடாதீர்கள். டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்து விடுங்கள்.

குக்கருக்கான ‘காஸ்கட்’டை அடிக்கடி சரிபார்த்துக் கொள்ளவும். ‘காஸ்கட்’ பழசாகிவிட்டால், விசில் வருவதற்குள் நான்கு புறமும் தண்ணீர் நிறைய கொட்டி இருக்கும். அந்தத் தண்ணீர் அடுப்பினுள் சென்றால், உள்ளே இருக்கும் எலெக்டிரிக் ‘காயில்’ பழுதாக வாய்ப்புள்ளது.

சுத்தம் செய்யும்போது அதிக சோப்புத் தண்ணீர் போட்டு கழுவக் கூடாது. ஸ்க்ரப்பரில் சிறிதளவு சோப்பு எடுத்துக்கொண்டு அழுத்தாமல் இலேசாக தேய்த்தால் சுத்தமாகிவிடும். பிறகு காய்ந்த துணி கொண்டு துடைத்துவிட்டு, மீண்டும் அலசிவிட்டு திரும்பவும் துடைத்துவிட்டால் ‘பளிச்’!

டுப்பின் கீழ்ப்புறம் காற்றாடி (Fan) உள்ளது. அதன் சுற்றுப்புறத்தில் வலை போல இருக்கும். அதில் தூசு அடையாமல் பழைய டூத் பிரஷ் கொண்டு அவ்வப்போது வெளிப்புறத்திலிருந்து சுத்தம் செய்ய வேண்டும்.

டுப்பின் உபயோகம் முடிந்தபின் உடனடியாக மெயின் ஸ்விட்ச்சை அணைக்கக் கூடாது. (அடுப்பில் உள்ள ஸ்விட்சை அணைத்துவிட்ட போதும் கீழே உள்ள காற்றாடி (Off position) சுற்றிக் கொண்டிருக்கும். காயில் ‘சூடு குறைவதற்கு காற்றாடி உதவுகிறது. எனவே அது சுற்றி தானாகவே நின்றபின், அடுப்பிலிருந்து வரம் சப்தமும் நின்றுவிடும். அதன் பிறகே மெயின் ஸ்விட்சை அணைக்க வேண்டும்.

டுப்பு உபயோகம் முடிந்த பின் அதன் மேல் தேவையில்லாமல் பாத்திரங்களை வைக்கக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com