வாஸ்து மீன் வளர்ப்பால் வருமான வரவு உண்டாகுமா?

Can Vastu Fish Farming Generate Income?
Can Vastu Fish Farming Generate Income?https://www.exportersindia.com

ற்போது வீட்டில் மீன்கள் வளர்ப்பது ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது. அதற்காகவே சிரத்தை எடுத்து பணம் செலவழித்து பார்த்துகொள்வதும் அதிகரித்து விட்டது. அழகுக்காக வளர்க்கப்படும் மீன்களை விற்பனை செய்வதற்காகவே கடைகள் வந்துவிட்டன. அதற்கான மவுசும் மக்களிடையே கூடிக்கொண்டே போகிறது.

மீன்களை வீட்டில் வளர்ப்பதற்கான காரணம் வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், அது மங்களகரமான விஷயமாகவும் கருதப்படுகிறது. மீன்களை வளர்ப்பதால் வீட்டிலுள்ள வாஸ்து பிரச்னைகள் தீரும். மீன்கள் வீட்டின் அழகை கூட்டுவது மட்டுமில்லாமல், எதிர்மறை சக்திகளை, நேர்மறை சக்தியாக மாற்றும் என்றும் நம்பப்படுகிறது. வீட்டில் வளர்க்கும் மீன் இறந்து விட்டால், அது வீட்டில் ஏற்படவேண்டிய பிரச்னையை தன்னுடன் எடுத்து சென்றுவிட்டது என்று கூறுவதுண்டு.

பகவான் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்ததை அறிவோம். அதனால் மீன்களால் செல்வம், சந்தோஷம், நிம்மதி போன்றவை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. விதவிதமான, வண்ணமயமான மீன்கள் செல்வம், வெற்றி, வீட்டில் நேர்மறை சக்தியை கொடுக்கும் என்கிறார்கள்.

மீன்களில் வண்ணமயமான அழகு மீன்களையும் தாண்டி வாஸ்துவிற்கெனவே சில மீன்கள் விற்கப்படுகின்றன. தங்க மீன்கள் அதன் அழகிற்கும் நிறத்திற்கும் பெயர் போன மீன்களாகும். வாஸ்து என்று வரும்போது, தங்க மீன்கள் மிகவும் மங்களகரமாகக் கருதப்படுகின்றன. இந்த மீன்கள் வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை தருவதாக நம்பப்படுகிறது.

பிளாக் மூர் தங்க மீன்கள் அதன் தனித்துவமான உருவத்திற்காக பிரசித்தி பெற்றதாகும். உருண்டையான உடலமைப்பு, வெளியில் தெரியும் அதன் கண்களுக்கும், கருப்பு நிறமும் இவ்வகை மீன்களை தனித்துவமாகக் காட்டுகிறது. இம்மீன்களை வளர்ப்பதால் பாதுகாப்பும், வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் விலகும் என்றும் நம்பப்படுகிறது. இவ்வகை மீன்கள் வீட்டிற்கு அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டர்பிளை காய் மீன்கள் அதன் மயக்கும் நிறத்திற்கும், அழகிற்கும் பெயர் போனவையாகும். ஜப்பானிய பாரம்பரிய முறைப்படி, இது ஒரு மாயாஜால மீன். தன்னுடைய உரிமையாளர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. இந்த மீன்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வீட்டில் இந்த மீனை வளர்த்தால் அவர்களுக்கு இருக்கும் லட்சியங்களை அடைய முடியும் என்றும் நம்பப்படுகிறது.

பட்டர்பிளை காய் மீன்கள் நீண்ட அழகான துடுப்புகளுக்கு பெயர் போனவையாகும். இதை பார்ப்பதற்கு பட்டாம்பூச்சியின் இறக்கை போன்று இருக்கும். இந்த மீன் வகை சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் காணப்படுகின்றன. இது அதனுடைய அழகிற்கும், அமைதிக்கும் பெயர் போனவையாகும். இந்த மீன்கள் மாற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவரும் என்று கருதப்படுகிறது. இது வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியையும், அமைதியையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

அரோவனாவை, ‘டிரேகன் மீன்’ என்றும் அழைப்பதுண்டு. இந்த மீன்கள் அதன் நீண்ட நேர்த்தியான கம்பீரமான அமைப்பிற்கு பிரசித்தி பெற்றதாகும். இந்த மீன்கள் ஏராளமான நிறங்களில் வந்தாலும் சிவப்பு மற்றும் தங்க நிறமே பிரசித்தி பெற்றதாகும். அரோவனா மீன்கள் செல்வ செழிப்பை கொடுப்பதற்கு பெயர் போனவையாகும். இந்த மீன் டிரேகனை ஒத்திருக்கும் தோற்றம் கொண்டதால் சக்தி மற்றும் வெற்றியை கொடுக்கும் என்று கருதுகிறார்கள். இந்த மீனை வீட்டில் வளர்ப்பதால் தொழிலில் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

ஏஞ்சல் மீன் மிகவும் பிரசித்தி பெற்ற மீன் வகையாகும். இது உறைய வைத்த உணவு வகைகளை உண்ணக்கூடியதாகும். இதன் உடலமைப்பு தட்டையாக இருக்கும். இதை வீட்டில் வளர்ப்பது நன்மையை தருவதாக கருதுகிறார்கள். இதன் உடல் முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். கருப்பு, வெள்ளி நிறங்களில் இருக்கும் இம்மீன்கள் பாதுகாப்பிற்கும் பாஸிட்டிவிட்டியையும் தருவதாக கருதுகிறார்கள்.

கப்பி மீன்கள் சின்னதாகவும், வண்ணமயமாகவும் அழகான வாலை கொண்டிருக்கும். இம்மீன்கள் அதன் சுறுசுறுப்பிற்கு பெயர் போனவை. மீன் வளர்க்க தொடங்குபவர்களுக்கு ஏற்ற மீன் இது என்று கூறுகிறார்கள். இம்மீன் அதன் கலகலப்பான மற்றும் சுறுசுறுப்பான தன்மையால் வீட்டில் பாஸிட்டிவ் எனர்ஜியை உருவாக்கும். இதனுடைய பளிச்சிடும் நிறம் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவற்றை குறிக்கிறது. வாஸ்து மீன்களில் இது ஒரு சிறந்த தேர்வாகும்.

பிளவர் ஹார்ன் மீன்கள் கண்களை கவரும் உருவத்தை கொண்டதாகும். இதன் தலையில் இருக்கும் திமில் அழகாக இருக்கும். மேலும் இதனுடைய நிறமும் பூக்களை போன்ற அமைப்புகளும் இதற்கு மேலும் அழகைக் கூட்டுகிறது. பிளவர் ஹார்ன் மீன்கள், தொழில் வளர்ச்சி மற்றும் வெற்றியை தருவதாக நம்பப்படுகிறது. இதன் தனித்துவமான நிறம் சாதனை மற்றும் வெற்றியை ஈர்க்கக் கூடியது என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
செரிமான சக்தி சீராக இருக்க கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம்!
Can Vastu Fish Farming Generate Income?

கோரி கேட்பிஸ் மிகவும் அமைதியான மீனாகும். இது தண்ணீருக்கு அடியிலேயே வாழும் தன்மையுடையது. அங்கே படிந்திருக்கும் ஆல்கேவை உண்டு தன்னுடைய இருப்பிடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும். இம்மீன்கள் அதிர்ஷ்டம் தருவது மட்டுமில்லாமல், குடும்பத்தில் அமைதியை நிலவச் செய்யும் என்று கூறுகிறார்கள்.

இதுபோன்ற மீன்களை வளர்க்கும்போது நீங்கள் கவனிக்க வேண்டியது விஷயங்கள், தண்ணீரின் தரத்தை கவனிப்பது அவசியமாகும், சிறந்த பில்டரேஷன் அமைப்பது மீன்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும், அட்டவணை போட்டு மீன்களுக்கு உணவு வழங்குவது அவசியமாகும், சூரிய ஒளியும், வெப்பமும் மீன்கள் இயற்கையான சூழலில் வளர்வதற்கு மிகவும் முக்கியமாகும், தண்ணீரை அவ்வப்போது மாற்றி மீன்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com