செம்பருத்திப் பூவை சாப்பிடலாமா?

Hibiscus flower
Hibiscus flower

செம்பருத்தி - ஓர் அழகான தோற்றமுடைய மலர் மட்டுமல்ல. பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய மலரும்கூட. சரும பராமரிப்பில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் செம்பருத்தி மலரை எவ்வாறெல்லாம் பயன்படுத்தி சுகம் அடையலாம் என்று பார்க்கலாம்.

செம்பருத்தி பூவில் ஒற்றை இதழ்கள் உடைய பூவை எடுத்துக்கொள்வதால் நிறைய ஆரோக்கியமான பலன்களைப் பெறலாம். ரத்த சோகை உடைய பெண்கள் தினமும் இந்தப் பூவை பச்சையாகச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

செம்பருத்தி பூவில் டீ செய்து குடிப்பதால் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி பாட்டில்களில் பத்திரப்படுத்தி தினமும் தலைமுடிக்குத் தடவி வர தலைமுடி கறுத்து அடர்த்தியாக வளரும்.

மாதவிடாய் காலத்தில் ஏழெட்டு செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிடுவதால் அதிகமாக உண்டாகும் ரத்த போக்கு தடுக்கப்படும்.

செம்பருத்தி மலரை பச்சையாகவோ அல்லது காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதயம் பலப்படும்.

தினமும் சில பூக்களை மென்று சாப்பிட்டு வந்தால், வாய் புண், வயிற்று புண் ஆறி குணம் கிடைக்கும். இந்தப் பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளிக்கும்போது தலையில் உள்ள பேன்கள் குறையும்.

இந்தப் பூவின் இதழ்களை 150 மி.லி நீரில் கொதிக்க வைத்து காலை நேரத்தில் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அந்தப் பொடியை சோற்று கற்றாழை, மற்றும் தேன் கலந்து வைத்துக்கொள்ளவும். முகத்தை வெந்நீரில் நன்கு கழுவி காட்டன் துணியால் நன்கு துடைத்துவிட்டு இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் முகம் தங்கம்போல் மின்னும்

இதையும் படியுங்கள்:
மனம் பக்குவம் பெற இந்த 6 வழிகள் போதும்!
Hibiscus flower

கோடைகாலத்தில் நம் சருமத்திற்கு இயற்கை ஊட்டச்சத்து தேவையாக இருக்கும்போது 2 செம்பருத்தி பூ இதழ்களை எடுத்து ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து அரைத்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் சருமத்தின் PHயை சமநிலை படுத்துகிறது. மற்றும் சருமத்தின் துளைகளை அகற்றி முகத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

மேலும், முகத்தை இளமையாகவும், சுருக்கம் இல்லாமலும், கருமையான திட்டுகள் இல்லாமலும் பாதுகாக்க செம்பருத்தி பொடி, பால், மற்றும் தேன் இவற்றை 2:2:1 என்ற விகிதத்தில் ஒரு கிண்ணத்தில் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்

செம்பருத்தி பூவில் உள்ள பீட்டா, கரோட்டின், மல்டி ஆக்டிவ் பண்புகள் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தின் உறுதியை அதிகரிக்கும்.

மேலும், இந்தப் பூவில் உள்ள (AHA) ஆல்பா ஹைட்ராக்ஸி ஆசிட்ஸ் சரும நிற மாற்றத்தைச் சரி செய்து முகப்பரு மற்றும் தழும்புகளை மறைத்து அழகான நிறத்தைத் தருகிறது.

செம்பருத்தி எண்ணெய் தோலை ஈரபதமுடனும் ஊட்டமாகவும் வைத்திருக்க உறுதியான கண்டிஷனர் பண்புகளைக் கொண்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com