
ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெப்பம் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பகலில் வானிலை மிகவும் வெப்பமாகிறது. கோடைக்காலத்தில் வாகனங்கள் தீப்பிடிப்பது முதல் டயர் வெடிப்பது வரை பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கோடையில் டயர்களின் பாதுகாப்பிற்காக, சாதாரணக் காற்றிற்குப் பதிலாக நைட்ரஜன் காற்றை நிரப்ப அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் காரில் நீண்ட தூரம் பயணம் செய்தாலும், டயர்களில் நைட்ரஜன் காற்றை நிரப்ப அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
ஏன் இவ்வாறு செய்யவேண்டும்? இப்போது இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன, இதன் நன்மைகள் என்ன? இந்த அறிக்கையில் இவை அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்வோமா?
1. நைட்ரஜன் காற்று கசிவதில்லை
உங்கள் டயர்களில் நைட்ரஜன் காற்றை நிரப்பினால், அது விரைவாகக் கசிந்துவிடாது. நீண்ட நேரம் டயரில் இருக்கும். அதேசமயம் சாதாரணக் காற்று மீண்டும் மீண்டும் கசிந்து கொண்டே இருப்பதால், நீங்கள் ஒவ்வொரு வாரமும் காற்றை மீண்டும் நிரப்ப வேண்டும்.
2. டயர்கள் சுருங்குவதில்லை
சாதாரணக் காற்றால் நிரப்பப்பட்ட டயர்கள், வாகனத்தின் மீது அதிகச் சுமையை ஏற்றும்போது வெப்பத்தை உருவாக்குகின்றன. இது சேதத்தை ஏற்படுத்தி டயர் வெடிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
அதேசமயம் நைட்ரஜன் காற்றில் இது நடக்காது. நைட்ரஜனின் வெப்பநிலை குறைவாக உள்ளது. டயர் சுருங்காது. இதில் டயர்களின் செயல்திறனும் அதிகரிக்கிறது.
3. துருப்பிடிக்கும் ஆபத்து இல்லை
நைட்ரஜன் காற்று நிரப்பப்பட்ட டயர்களின் விளிம்புகளில் துருப்பிடிக்கும் அபாயம் இல்லை. அதேசமயம், சாதாரணக் காற்றால் நிரப்பப்பட்ட டயர்களுக்குள் ஈரப்பதமும் இருக்கும். ஈரப்பதம் காரணமாக, விளிம்பு (சக்கரம்) துருப்பிடிக்கும் அபாயம் உள்ளது, மேலும் அதன் ஆயுளும் குறைகிறது. விளிம்புகள் விரைவாகத் தேய்ந்துவிடும்.
4. சிறந்த மைலேஜ் கிடைக்கும்
இந்த நைட்ரஜன் லேசானது என்றும், இதன் காரணமாக வாகனத்தின் செயல்திறன் மிகவும் மேம்படுகிறது என்றும், இயந்திரத்தின் மீது சுமை குறைவாக இருப்பதால் எரிபொருள் நுகர்வு குறைவாகவும், மிகப்பெரிய மைலேஜ் பெறப்படுவதாகவும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
5. டயர்களின் ஆயுளை அதிகரிக்கிறது
நைட்ரஜன் காற்றால் நிரப்பப்பட்ட டயர்களின் ஆயுள் மிகவும் நன்றாக இருக்கும். டயர்கள் சேதமடையாது, நகரத்திலிருந்து நெடுஞ்சாலை வரை நல்ல செயல்திறனைப் பெறுவீர்கள்..
எங்கே கிளம்பிட்டீங்க? புரியுது... உங்க கார் டயர்க்கு நைட்ரஜன் காத்து நிரப்பதானே?