வெளிப்புற சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப நமது உடல் தானாக வெப்பத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யும். அதன்படி, குளிர் காலங்களில் அதிக சக்தி தந்து உடல் சூட்டை தக்க வைக்க உதவும் சில ஸ்நாக்ஸ் பற்றி இந்தப் பதிவில் அறிவோம்.
கொண்டை கடலையை ரோஸ்ட் செய்து சிறிது ஆலிவ் ஆயிலில் பிறட்டி, உப்பு தூள், மிளகு தூள், மூலிகை இலைகள் சேர்த்து கலந்து சாப்பிட்டால் அதிலுள்ள புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலுக்கு அதிக பலம் சேர்த்து ஆரோக்கியமுடன் இருக்க உதவும்.
ஸ்வீட் போட்டட்டோவை ஸ்லைஸ்களாக்கி ஆலிவ் ஆயிலில் பிறட்டி, உப்பு தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து ஓவனில் வைத்து, போட்டட்டோவின் வெளிப்பக்கம் கிரிஸ்பியாகவும் உள்புறம் மிருதுத் தன்மையுடனும் இருக்குமாறு பேக் (bake) பண்ணி உண்பதால் சுவையும் நல்ல சத்துக்களும் கிடைக்கும்.
சூடான டீயில் சிறிது தேன் சேர்த்து குடிக்கும்போது நாவிற்கு இதம் தரும் சுவை கிடைப்பதுடன், டீக்கு இயற்கையாக சேரும் இனிப்பு சுவையும் உடலுக்கு கூடுதல் வெது வெதுப்பும் கிடைக்கிறது.
வெல்லமும் வேர்க்கடலைப் பருப்பும் சேர்த்து தயாரிக்கப்படும் 'சிக்கி' என்னும் கடலை மிட்டாயை உண்பதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கிறது. பசி உணர்வும் தற்காலிகமாக தள்ளிப்போகிறது. வேர்க்கடலைப் பருப்பில் இருக்கும் அதிகப்படி உஷ்ணமளிக்கும் குணமானது உடல் சூட்டை தக்க வைக்க உதவும்.
மனதுக்குப் பிடித்தமான பாதம், முந்திரி, பிஸ்தா போன்ற ஏதாவதொரு நட்ஸ்ஸுடன், பட்டை, ஜாதிக்காய் பொடி கலந்து தேனில் பிறட்டி டோஸ்ட் செய்ய பிரமாதமான சுவையில், 'ஹனி ரோஸ்ட்' கிடைக்கும். இதன் மொறு மொறுப்பு சுவையும் இதிலுள்ள புரோட்டீன் சத்தும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவாகிறது.
கேரட், காலே, பட்டர் நட் குவாஷ் சேர்த்து தயாரிக்கப்படும் வெஜிடபிள் சூப் அதிகளவு ஊட்டச் சத்துக்களை உடலுக்கு அளிக்க வல்லது.
மேற்கூறிய உணவு வகைகளை அடிக்கடி உட்கொண்டு குளிர் காலத்தில் உடலில் உஷ்ணம் குறையாமல் பாதுகாப்போம்.