வண்ணங்களும் எண்ணங்களும்!

வண்ணங்களும் எண்ணங்களும்!

ண்ணங்கள் நமது வாழ்வை வளமாக்குவதோடு, புத்துணர்ச்சியையும் தருகிறது‌. ‘கலர் தெரபி’ எனப்படும் சிகிச்சை முறை பல்வேறு உடல் உபாதைகளை நீக்க உதவுகிறது. வண்ணங்கள் நமது உணர்வுகளை முறைப்படுத்துவதோடு, மனதுக்கு அமைதித் தந்து எண்ணங்களையும் நேர்படுத்துகிறது.

உதாரணமாக, தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் மெலிதான நீல நிற விரிப்புகளை படுக்கையில் விரித்துப் பயன்படுத்த நல்ல தூக்கம் வரும். அறைகளுக்கு வெளிர் நீலம், கடல் நீலம் போன்ற வண்ணங்களை அடிக்கலாம். இதேபோல், பச்சை வண்ணம் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

ஆரஞ்சு வண்ணம் மனதை சாந்தப்படுத்தி, மகிழ்ச்சியையும் புத்துணர்வைத் தரும் ஆற்றல் கொண்டது. இந்த நிறம் தைராய்டு சுரப்பியையும் சீர்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வெண்மை மற்றும் நீல நிறங்கள் நேர்மறை எண்ணங்களைத் தரவல்லவை. இது மட்டுமின்றி, வெண்மை நிறம் அமைதியைக் கொடுக்கும். தூய்மையின் அடையாளமான வெண்மை நிறம் மனதை சாந்தப்படுத்தி, கோப உணர்வுகளை கட்டுப்படுத்தும்.

வலிமையின் நிறம் சிவப்பு. மஞ்சள் உணர்வுபூர்வமான நிறம். தன்னம்பிக்கை, ஆக்கபூர்வ சிந்தனைகள், நட்புணர்வு, நேர்மறை சிந்தனை ஆகியவற்றின் குறியீடாக மஞ்சள் கருதப்படுகிறது.

கருப்பு வண்ணத்தை தீய சக்திகளின் அடையாளம் எனக் குறிப்பிட்டாலும் திறமை, அறிவு, கவர்ச்சி, நம்பகத்தன்மை போன்றவற்றை உணர்த்தக் கூடியது கறுப்பு நிறம்.

பிங்க் அல்லது ரோஸ் நிறம் பெண்களுக்கானதாகவும், மென்மையின் குறியீடாகவும் கருதப்படுகிறது. மொத்தத்தில் வண்ணங்கள் இல்லா வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை‌ என்றுதான் கூற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com