எண்ணங்களைச் சொல்லும் வண்ணங்கள்!

Colors that convey thoughts
Colors that convey thoughts
Published on

வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் புதிய துணிகள் எடுக்கும்போது, “உனக்கு என்ன நிறம் பிடிக்கும்?” என்று ஒவ்வொருவராகக் கேட்டு, அந்த நிறத்தின் பிரத்தியேக பண்பு மற்றும் குணநலங்களை கூறி நேர்மறையாக சிந்திக்கத் தூண்டுவர். நிறங்களின் சக்தியையும், அது கூறும் குணங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.

வண்ணத் தட்டில் இருந்து பிடித்த வண்ணத்தை தேர்வு செய்ய சொல்லும்போது ஒருவர் சிவப்பு, மஞ்சள் போன்ற பிரகாசமான வண்ணங்களை விரும்புபவராயின் தொலைநோக்குடைய தோழமை உள்ள நபராக இருப்பார். இளஞ்சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்பவர் ஆயின் கூச்ச சுபாவமுள்ள நபராய் இருப்பார்.

பச்சை நிறம் பராசக்தியின் வடிவத்தைக் குறிக்கிறது. செழுமையை கொடுப்பது இந்த நிறத்தின் குணம்.

நீல நிறம் கிரியா சக்தியை கொண்டது. அருள் சுரப்பதே இந்நிறத்தின் குணம்.

கருப்பு நிறத்தின் குணம் மாயா சக்தியாகும். இது அறியாமை குணத்தை குறிக்கிறது.

சிவப்பு நிறம் இச்சையை தூண்டும் சக்தியை உடையது. குதூகலத்தை உண்டாக்குவது இதன் குணம்.

மஞ்சள் நிறம் ஞானத்தை உண்டாக்கும் சக்தி உடையது. இதன் குணம் தூய்மையாகும்.

வெண்மை நிறம் ஆதி சக்தியை குறிப்பது. ஊசலாட்டம் இல்லாத ஒருமை உணர்வே இதன் குணம்.

ஒருவர் தான் உபயோகப்படுத்தும் மேஜையில் வண்ண வண்ண தாவரங்கள் மற்றும் வண்ணப் புகைப்படங்களைக் கொண்டு அலங்கரித்து இருந்தால் அந்த மேஜையை அவர் தனது சொந்த உடைமையாகக் கருதுபவராகவும், பணி செய்யும் இடத்தில் நீண்ட நாட்கள் ஒட்டிக்கொள்பவராகவும் இருப்பார். குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை வைத்திருப்பவர் என்றால் அவர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருப்பார்.

பொதுவாக, வண்ணப் பறவைகளை விரும்புபவர்கள், பார்வையாளராகவும், கனவு காண்பவராகவும் இருப்பர். ஆளுமைத் திறன் உடையவர்கள் மற்றும் ஆதிக்க சக்தியை விரும்புபவர்கள் சிங்கத்தை விரும்புவர்.

ரசித்துப் பார்க்கும் திரைப்படங்கள் மூலமும் ஒருவரின் குணத்தை கணிக்க முடியும். கருப்பு, வெள்ளை திரைப்படங்களை ரசித்துப் பார்க்கும் ஒருவர் காதல் படங்களை அதிகமாக பார்ப்பவராக இருந்தால் நிஜ வாழ்விலும் காதல் வயப்பட்டவராக இருப்பார் அல்லது வாழ்க்கையைப் பற்றிய அவரது அணுகுமுறை தளர்வாய் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கடலை மாவிலிருக்கும் கடலளவு நன்மைகள்!
Colors that convey thoughts

திகில் வண்ணத் திரைப்படம் பார்ப்பவராக இருப்பின் தனிப்பட்ட வாழ்விலும் திகில் அனுபவங்களை விரும்புபவராக இருப்பார். அறிவியல் சார்ந்த படங்களை காண்பவராக இருந்தால் அறிவாளியாகவும், தனது அறிவுப் பசியை தீர்த்துக் கொள்பவராகவும் இருப்பார்.

வாசலில் வண்ணக் கோலங்களைப் போடுவதிலும் அவரவர்கள் உபயோகப்படுத்தும் நிறங்களை வைத்து அவர்களின் குணங்களை வகைப்படுத்தலாம். வெளிர் நிறமான வண்ணங்களையே அதிகம் தீட்டுபவர்கள், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும், இரக்க சிந்தனை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

ஆழ்ந்த நிறங்களை உபயோகப்படுத்தி கோலம் போடுபவர்கள் இறை பக்தியில் சிறந்தவர்களாகவும், போராடி வெற்றி பெறும் குணமுள்ளவர்காகத் திகழ்வார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com