பெண்களைப் பெருமைப்படுத்தும் நாடுகள்!

பெண்களைப் பெருமைப்படுத்தும் நாடுகள்!

பெண்களை அதிகம் மதிக்கும் உலக நாடுகளில்   ஒன்று அசர்பைஜான்.இந்நாட்டில் பஸ்ஸில் அல்லது ரயிலில் பயணிக்கும்போது ஒரு பெண் வந்து விட்டால் அந்த பெண்ணிற்கு எழுந்து இருக்கையை முதியவர்கள் கூட தந்து விடுவார்கள். இந்த நாட்டில் மட்டும் தான் "சர்வதேச பெண்கள் தினம்' தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

லகிலேயே எட்டு நாடுகள் மட்டும் தான் பெண்களுக்கு முழு அளவில் சம அந்தஸ்து வழங்கியுள்ளது அந்த எட்டு நாடுகள் ஐஸ்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், கனடா, சுவீடன், லாட்வியா மற்றும் லக்சம்பர்க்.

லகிலேயே பெண்கள் வாழ சிறந்த இடம் ஐஸ்லாந்து நாடுதான். இங்குதான் ஆண்களுக்கு இணையாக சரிசமமாக அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பு போன்றவைகளில் பெண்களுக்கு இடம் கொடுக்கப்படுகிறது.

லகிலேயே ரிவாண்டா நாடு மட்டுமே பெண்களுக்கு பாராளுமன்றத்தில் அதிக இடங்களை கொடுக்கும் நாடு. இங்குள்ள 80 பாராளுமன்ற இடங்களில் 45 இடங்களை பெணகள் இடம் பிடிக்கிறார்கள்.

டிப்பறிவில் பெண்கள் சிறந்த விளங்கும் நாடு லிசோதோ நாடுதான். இங்கு பெண்கள் ஆண்களை விட அதிகமாக நன்கு எழுத படிக்கத்தெரிந்தவர்கள். இங்கே பெண்கள் 95% பேர் நன்றாக படித்து பட்டம் பெற்றவர்கள். ஆண்களில் 83 % பேர் தான் படிப்பறிவு பெற்றவர்கள்.

பெண்கள் ஆரோக்கியமான சுழலில் வாழ சிறந்த இடம் நார்வேநாடு தான். இங்கே பெண்களில் 7600 பேருக்கு ஒருவருக்கு தான் ஆரோக்கிய சிக்கல் ஏற்படுகிறதாம்.. மற்ற படி அனைவரும் சிரமம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அந்தளவுக்கு அங்கே பெண்களுக்கு மருத்துவ வசதிகள் உள்ளன.

சுவீடன் நாட்டில் பெண்கள் கலைத்துறையில் முன்னேற்றம் அடைய அந்நாடே பலவிதங்களில் உதவுகிறது. சினிமா தயாரிக்க  பெண்களுக்கு தனியாக மானியங்கள் அங்கே வழங்கப்படுகின்றன. சினிமா தயாரிக்க அங்கே பெண்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு.

ப்பான் நாட்டில் தான் பெண்களின் வாழ்நாள் அதிகமுள்ளது. சராசரியாக அங்கே பெண்கள் 87 வயது வரை வாழ்கிறார்கள். ஆண்களின் வாழ்நாள் அங்கே 80 தான்.

லகிலேயே பெண்கள் ரிலாக்ஸாக வேலை பார்க்க சிறந்த நாடு டென்மார்க் தான். இந்நாட்டில் பெண்களுக்கு வேலை செய்யும் போது அதிகளவில் ஓய்வு கிடைக்கிறது. இங்கே பெண்கள் வேலை நேரத்தை தவிர்த்து அதிகப்படியாக 5 நிமிடங்கள் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். மெக்சிகோ நாட்டில் இவ்வகையில் மோசம் இங்கே பெண்கள் வேலை நேரம் தவிர்த்து அதிகப்படியாக 4மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

லகில் விளையாட்டின் மூலமாக அதிகம் சம்பாதிக்கும் பெண்களில் 10 பேரில் 5 பேர் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள்.அதேபோல் ஒலிம்பிக்கில் அதிக தங்கப்பதக்கம் பெற்ற வர்களும் அமெரிக்கா நாட்டு பெண்கள்தான். அந்தளவுக்கு அந்நாடு பெண்களுக்கு விளையாட்டில்  சிறந்துவிளங்க ஊக்கம் அளிக்கிறது.

ந்தியாவில் 3500 பெண விமானிகள் உள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் விமானிகள் இல்லை. அதில் 34 பேர் இஸ்லாமிய பெண்கள்.

லகிலேயே  லக்சம்பர்க் என்ற நாட்டில்தான் பெண்கள் ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கிறார்கள். சராசரியாக இங்கே பெண்களுக்கு வருமானம் 40,000 டாலர்கள்.

லகில் இலங்கை மட்டும் தான் ஒரு பெண்ணை அந்நாட்டின் தலைமை பொறுப்பில்  23 ஆண்டுகள்  வைத்து அழகு பார்த்தது. ஸ்பெயின் மற்றும் சுவீடன் நாடுகள் கூட அந்நாடுகளில் பெண்களை நாட்டின் தலைமை பொறுப்பில் அதிக நாட்கள் வைத்திருந்தது ஆனால் இந்த அளவுக்கு இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com