மாணவர்கள் ஹேர் கலரிங் மற்றும் மேக்கப் போட்டுக்கொள்ள தடை விதித்துள்ள நாடுகள்!

hair coloring and makeup
hair coloring and makeup
Published on

ன்றைய இளம் வயதினருக்கு, குறிப்பாக பதின்பருவத்தினருக்கு தங்களை அழகாக ஒப்பனை செய்து கொள்வதில் ஆர்வம் அதிகம். விதவிதமாக சிகை அலங்காரங்கள், ஹேர் கலரிங் செய்து கொள்வது, முகத்திற்கு மேக்கப் போட்டுக்கொள்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். ஆனால், உலகத்தில் எல்லா நாடுகளிலும் நிலைமை அப்படி அல்ல. சில நாடுகளில் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த நாடுகள் என்பதையும் அதற்கான காரணங்கள் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஹேர் கலரிங் மற்றும் மேக்கப் போட்டுக்கொள்ள தடை விதித்துள்ள நாடுகள்:

ஜப்பான் மற்றும் கொரியாவில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றின் முக்கியமானவை அவர்கள் ஒப்பனை செய்யக்கூடாது மற்றும் முடிக்கு வண்ணம் தீட்டக் கூடாது என்பதாகும். அங்கே சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் கூட இந்தக் கட்டுப்பாடுகள் உண்டு. அதற்கான காரணங்களைப் பற்றி பார்ப்போம்.

கல்வியில் கவனம்: ஜப்பான் மற்றும் கொரியாவில் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. மேலும், கல்வி மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அழகு மற்றும் ஃபேஷனில் நேரத்தையும் வளங்களையும் செலவிடுவதை விட மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலாசார பாரம்பரியம்: ஜப்பானிலும் கொரியாவிலும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. மாணவ, மாணவியர்கள் தங்கள் முடிக்கு வண்ணம் தீட்டுவது மற்றும் ஒப்பனை பயன்படுத்துவது போன்றவை கலாசார மரபுகள் மற்றும் மதிப்புகளை சீர்குலைக்கும் ஒரு மேற்கத்திய தாக்கமாக கருதப்படுகிறது. அதனால் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக அழுத்தம்: ஹேர் கலரிங் மற்றும் மேக்கப்பை பயன்படுத்தும் மாணவர்கள் கலகக்காரர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சமூக புறக்கணிப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள்.

சீருடைக் கொள்கை: ஜப்பானிலும் கொரியாவிலும் உள்ள பல பள்ளிகள் கடுமையான பள்ளிச் சீருடைக் கொள்கைகளைக் கொண்டுள்ளன. அவை மாணவர்களின் தோற்றத்தை எந்த வகையிலும் மாறுபாடுகள் ஏற்படுவதை தடுக்கின்றன. இதில் முடி நிறம் மற்றும் ஒப்பனை ஆகியவையும் அடங்கும்.

இதையும் படியுங்கள்:
பீங்கான் பாத்திரங்களை உபயோகிப்பதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?
hair coloring and makeup

ஒழுக்கம்: முடியின் நிறத்தை மாற்றுவது முகத்திற்கு ஒப்பனை பயன்படுத்துவது போன்றவை கற்றல் சூழலில் இருந்து மாணவர்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தும். ஒழுக்கம் மற்றும் நடத்தை மீறலை உண்டாக்கும் என்று கருதுகிறார்கள்.

வயதுக் கட்டுப்பாடுகள்: இரு நாடுகளிலும் முடிக்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் ஒப்பனை உள்ளிட்ட சில அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள் உள்ளன. அவர்கள் குறிப்பிட்ட வயது அடையும் வரை அல்லது பெற்றோரின் ஒப்புதலை பெறும் வரை இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.

பாதுகாப்புக் கவலைகள்: சில அழகுப் பொருள்கள் சருமம் மற்றும் முடிக்கு தீங்கு விளைவிப்பதாக ஜப்பானியர்களும் கொரியர்களும் அஞ்சுகிறார்கள். இவற்றை அதிகமாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கல்வியாளர்களும் அஞ்சுகிறார்கள்.

முன்மாதிரிகள்: இரு நாடுகளிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளி விதிகளை கடைபிடிப்பதன் மூலமும் கவனத்தை சிதறடிக்கும் அல்லது பொருத்தமற்றதாகக் கருதக்கூடிய நடத்தைகளை தவிர்ப்பதன் மூலமும் ஒரு நல்ல முன்மாதிரியை ஏற்படுத்துவார்கள் என்று எண்ணுகிறார்கள்.

மதிப்புகளுக்கு முரண்: ஜப்பான் மற்றும் கொரியாவில் உள்ள பல பள்ளிகள் பணிவு, எளிமை மற்றும் அடக்கம் போன்ற மதிப்புகளுக்கு வலுவான முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஹேர் கலரிங் மற்றும் மேக்கப் பயன்படுத்துவது இந்த மதிப்புகளுக்கு முரணானதாகக் கருதப்படுகிறது. எனவே, அவற்றைத் தடை செய்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com