காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கு பல மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. கோரைக் கிழங்கை காய வைத்து தூள் செய்து அரை தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வர, மூட்டு வலி, தசை வலி குணமாகும்.
கோரைக் கிழங்கை காய்ச்சாத பசும் பாலுடன் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர, வியர்வை நாற்றம் குணமாகும். இது ரத்தத்திலுள்ள அசுத்தங்களைப் போக்கும். உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும். மாதவிலக்கை தூண்டக் கூடியது.
கோரைக் கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது. இஞ்சி, கோரைக் கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி அதில் சிறிதளவு தேன் சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட, குடல் புழுக்கள் வெளியேறும்.
கோரைக் கிழங்கை நசுக்கி, அதனுடன் ஊறவைத்த வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து, வடிக்கட்டி குடித்துவர, சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்று மற்றும் அல்சர் குணமாகும்.
பால் கொடுக்கும் தாய்மார்கள், பச்சையான கோரைக் கிழங்குகளைச் சேகரித்துக் கழுவி சுத்தம் செய்து அரைத்து மார்பகத்தல் பூசி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாகவும் விளங்கிறது கோரைக் கிழங்கு.