செல்லமே… செல்லம்!

செல்லமே… செல்லம்!

நிறைய நேரங்களில் பெண் பிள்ளைகளின் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும்.  பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித் தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

யது வந்த மகளுடன் தந்தை செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். இருவரும் சேர்ந்து விளையாடுவது, ஷாப்பிங் போவது, தோட்ட வேலை, செய்வது என இருந்தால் அப்பா – பொண்ணு அந்நியோன்யம் நீடிக்கும்.

களுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். மகள் யாருடன் பழகுகிறாள். அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வதில் முக்கியம் அல்லவா?

ல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுங்கள். ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். படிப்பில் அவளுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

ண்களைப் பற்றிச் சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்றும் சொல்லுங்கள்.

வாழ்க்கையைப் பற்றி அடிக்கடிப் பேசுங்கள். பின்னாளில் என்னவாக விரும்புகிறாள் என்பதைக் கேளுங்கள். அதற்கு நீங்கள் அவளுக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

டை ஷாப்பிங், ஹோட்டல் என்று அழைத்துச் செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்துகொள்கிறார்கள். பழகுகிறார்கள் என்பதை அவள் தெரிந்துகொள்வது நல்லது.

நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் மகளை நம்புகிறீர்கள். அவளைப் பற்றி எப்படிப் பெருமைப்படுகிறீர்கள். அவள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவளுக்குத் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

ரொம்பவும் செல்லம் கொடுக்காதீர்கள்; அதே சமயம் கறாராகவும் இருக்காதீர்கள். அன்பு காட்டும் விஷயத்தில் பேலன்ஸ்டாக இருங்க.

ம் குடும்பத்தைப் பற்றி அவளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். முன்னோர்களின் சிறப்புகளைப் பற்றி அவள் அறியட்டும். அப்போதுதான் குடும்ப கெளரவம் குலையும்படியான விஷயங்களில் ஈடுபட மாட்டாள்.

ங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுதுபோக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவளுக்குத் தெளிவாகச் சொல்லுங்கள்.

வளது ரசனை மேம்படச் செய்யுங்கள். புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே ஊக்குவியுங்கள். வீட்டில் புத்தகங்களைச் சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நல்ல இசை, சினிமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபடுத்துங்கள்.

டலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்னைகள் வெளியுலகில் வரும். அதை எப்படிச் சமாளிப்பது என்று கற்றுத் தாருங்கள்.

ன்றைய உலகம் இயந்திரமானது. அடுத்தவர் கையை சிறு பிரச்னைகளுக்கெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆண்கள் உதவ வர வேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது.  வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள்.

வை எல்லாவற்றையும்விட, நீங்கள் ஒரு உதாரணமாக வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும்.  உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள். மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com