கண்ணாடியை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் சிறு தவறும் பார்வையை பாதிக்கும் தெரியுமா?

கண்ணாடியை தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் சிறு தவறும் பார்வையை பாதிக்கும் தெரியுமா?

ண்களில் ஏற்படும் சற்று பார்வை குறைபாடு மாறுபாட்டாலேயே பலருக்கும் கண்களுக்கு கண்ணாடி அணியும் அவசியம் ஏற்படுகிறது. வருடாந்திர கண் பரிசோதனை, சமச்சீர் உணவு, உடற்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவை கண் பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

கண்ணாடி அணியும் பலரும் அதை முறையாகப் பராமரிப்பதில்லை. நேரமின்மை போன்ற காரணமாக தாங்களாகவே கண் கண்ணாடி கடைகளுக்கு சென்று பிரேம் செலக்ட் பண்ணி கண்ணாடி வாங்கிக் கொள்கிறார்கள். பார்வையில் வித்தியாசம், கண் எரிச்சல், கண் பொங்குதல் போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்கு தாங்களாகவே மருந்து போடுவது, சரியாகி விடும் என நினைப்பது தவறு. அவசியம் கண் மருத்துவரை அணுகி பார்வைக் குறைபாட்டுக்கு சரியான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கண் கண்ணாடியை பராமரிக்க தினசரி சில நிமிடங்கள் மெனக்கெடுதல் அவசியம். தினமும் கண்ணாடியை சாஃப்ட் கிளாத் கொண்டு துடைத்த பிறகு அணிய வேண்டும். சிறுவர்களுக்கான கண்ணாடி எனில், அதன் பிரேமை பைபரில் இருக்கும்படி வாங்கிக் கொடுக்க அது உடையாமல் அவர்கள் உபயோகிக்க எளிதாக இருக்கும்.

முக அமைப்புக்கு ஏற்றவாறு கண்ணாடியின் பிரேமை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படித் தேர்ந்தெடுத்தால்தான் பார்வை சரியாக இருக்கும். ஸ்டைலுக்கு என சின்னச் சின்ன ‌பிரேம் கண்ணாடி போட தலைவலி, பின்னாளில் பார்வை குறைபாடு போன்றவை உண்டாக்கும்.

கண்ணாடியில் விழும் சிறு கீறல் கூட பார்வையில் மாறுபாட்டைத் ஏற்படுத்தும். மூக்கின் மீது கண்ணாடி பொருந்தும் பகுதியில் நோஸ் பேடை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற, தோலில் கருப்பு படிவது குறையும்.

கண்ணாடி அணிந்து கொண்டு தூங்குவது, தலைக்கு மேல் கண்ணாடியை வைத்துக் கொள்வது கூடாது. பிரேமில் சிறு வளைவு, பெண்டு ஏற்படுவது கூட பார்வை மாறுபாட்டை ஏற்படுத்தும். சிறு குழந்தைகளுக்கு தரமற்ற கூலிங் கிளாஸை அணிவிப்பது தவறு.

உலோகங்களாலான பிரேம் அணிவது அலர்ஜியை ஏற்படுத்தினால் அதை தவிர்க்கலாம். கண் கண்ணாடி பிரேம் நல்ல பார்வைக்கு மட்டும்தான் என்பதைப் புரிந்து கவனமாக உபயோகிக்க நன்மை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com