வீட்டு சுவற்றில் பெயின்ட் பண்ணி போர் அடிச்சிட்டா? அப்போ வால்பேப்பர் ஒட்டுங்க...

Benefits of wallpaper
Benefits of wallpaperImage Credits: Vogue India
Published on

நம் வீட்டை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு. வீட்டில் முக்கியமாக நாம் பார்த்து பார்த்து செய்வது வண்ணம் பூசுவது. இதுவே ஒரு வீட்டின் முழு தோற்றத்தையும் மாற்றக்கூடியதாகும். எப்போதும் போல வண்ணம் பூசுவது போர் அடித்து போனால், அதை  விட்டுவிட்டு அதற்கு மாற்றாக விதவிதமான டிசைன்களில் வால்பேப்பர் தற்போது சந்தையில் டிரெண்டாகி வருகிறது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

வீட்டில் வால்பேப்பர் பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க.

வீட்டில் பெயின்ட் அடிப்பதை விட வால்பேப்பர் ஒட்டுவதால் செலவு மிச்சமாகிறது. இது அதிக காலம் உழைப்பதால், 15 வருடத்திற்கு மேல் தாக்குப்பிடிக்கும். பெயின்ட் சீக்கிரமே உரிஞ்சி போக வாய்ப்புள்ளது.

சுவரின் அமைப்பு சரியாக இல்லாமல் இருப்பதை கூட வால்பேப்பரை ஒட்டி மறைத்து விடலாம். இதனால் சுவர் பார்ப்பதற்கு எந்த குறையும் இல்லாமல் அழகாக இருக்கும்.

வால்பேப்பர் அதிக டிசைன்களிலும், நிறங்களிலும் வருகிறது. Bead, flock, Metallic, Emboss போன்ற பலவகைகள் உள்ளது. 3D வால்பேப்பர்களும் சந்தையில் இருக்கின்றது. இதை வால்பேப்பராகவும் ஒட்டலாம், தரையில் Flooring ஆகவும் போட்டுக்கொள்ளலாம்.

வால்பேப்பரை ஒட்டுவது மிகவும் சுலபம் என்பதால் நாமே ஒட்டிக்கொள்ளலாம். பெயின்ட் அடிப்பதற்கு ஆட்களுக்கு செலவு செய்வது போல இதற்கு எந்த செலவும் ஏற்படாது.

வீட்டில் குழந்தைகள், வளர்ப்பு பிராணிகள் வைத்திருக்கும் போது அதனால் சுவற்றில் கறை ஏற்படலாம். பெயின்ட்டாக இருக்கும் போது கறையை நீக்குவது கடினம். இதுவே வால்பேப்பராக இருக்கும் போது அதை சுலபமாக துடைத்து எடுத்துவிடலாம்.

பழைய வால்பேப்பர் டிசைன் பிடிக்கவில்லை என்றால் நாமே அதை சுலபமாக நீக்கிவிட்டு புது வால்பேப்பரை வாங்கி ஒட்டிக்கொள்ளலாம். பெயின்டை விட இதற்கு ஆகும் செலவு கம்மி என்பதால் நாமே ஒரே நாளில் இந்த வேலையை முடித்துவிடலாம். இதனால் செலவும் மிச்சம் நேரமும் அதிகம் செலவாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
டாட்டூஸ் பிரியரா நீங்க? டாட்டூவை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க...
Benefits of wallpaper

இதில் Water resistance, fire resistance உள்ளது. அதனால் எளிதில் தீப்பிடிக்கவோ, சுவர் கறையாகவோ வாய்ப்பில்லை. பெயின்டை விட வால்பேப்பரை ஒட்டும்போது மொத்த வீட்டின் லுக்கையே மாற்றிவிடும். சுவர் உடைந்திருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பழுது இருக்குமாயின் அதன் மீது வால்பேப்பரை ஓட்டி மறைத்துவிடலாம். இதனால்  வீடு முன்பை இருந்ததை விட அழகான தோற்றத்தை பெறும்.

வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த டிசைன்னை அவர்களுடைய அறைக்கு தேர்வு செய்து கொள்ளலாம். பெயின்டை போல ஒரே நிறத்தையே எல்லா அறைக்கும் அடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com