நீங்கள் உணவில் அதிகம் உப்பு சேர்த்து சாப்பிடுபவரா? அச்சச்சோ… ஜாக்கிரதை!

உப்பு
உப்பு
Published on

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்கிற பழமொழிக்கு ஏற்ப உணவில் ஒரு சிட்டிகை உப்பு கூடினாலோ அல்லது குறைந்தாலோ அந்த உணவு எத்தனை சுவை மிகுந்ததாக இருந்தாலும் உண்ண முடியாது. அதுதான் உணவின் முதல் சுவைக்கு அந்தாதி. அதற்காக அதை அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. உப்பின் தேவை: ஒருவருக்கு உப்பின் தேவை என்பது அவரின் உடல் வெளியிடும் சோடியத்தின் அளவைப் பொறுத்து அமைகிறது. உதாரணமாக, அதிக உடற்பயிற்சி, உடல் உழைப்பை செய்கிறவர்களுக்கு வியர்வையின் மூலமாக சோடியம் அதிகமாக வெளியேறும். அவர்களுக்கு அதிகமான சோடியத் தேவை இருக்கும். சராசரியாக ஆரோக்கியமான உடலைக் கொண்டோருக்கு ஒரு நாளைக்கு 1500 முதல் 2300 மில்லி கிராம் அளவு சோடியம் போதுமானது.

2. உயர் இரத்த அழுத்தம்: நீங்கள் அதிகமாக உப்பை உட்கொண்டால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். அதனால் நீங்கள் அதிக தண்ணீர் அருந்தும்போது உடல் தேவைக்கு அதிகமான உப்பை சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஒருவேளை நீங்கள் தண்ணீர் அருந்தாமல் விட்டால் அந்த உப்பானது இயற்கையாக செல்களுக்குள் உற்பத்தியாகக் கூடிய நீருடன் இணைந்துவிடும். இது இரத்தத்திலும் ஊடுருவி கலந்துவிடும். இதனால்தான் உயர் இரத்த அழுத்தப் பிரச்னைகள், அதிகப்படியான கோபம் ஆகியவை வருகின்றன. ஆகவே, நீங்கள் உணவு உண்ட பின் அதிக நீரை அருந்தி தேவையில்லாத உப்பை வெளியேற்றுங்கள்.

3. சிறுநீரகப் பிரச்னைகள்: அதிக அளவிலான சோடியம் சிறுநீரகத்தையும் தாக்குகிறது. இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாதல், சிறுநீரகம் பழுதடைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் அதிக நீரை அருந்தி சிறுநீரை அவ்வபோது வெளியேற்றி விடுங்கள். சிறுநீர் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்தாமல் உடனே வெளியேற்றிவிடுவது நல்லது. ஏனெனில், சோடியம் கலந்த சிறுநீர் அதிகம் நேரம் தேங்கி இருந்தால் சிறுநீரகத்தை பாதிக்கும்.

இதையும் படியுங்கள்:
சுருக்கக் காலுறைகளை அணிவதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் தெரியுமா?
உப்பு

4. தசை வலிகள்: அதிக உப்பு நரம்பு மண்டலத்தையும் தசைகளின் ஆற்றலையும் தடுக்கிறது. இது உடலில் மின்னழுத்த ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இதனால் தசைப் பிடிப்பு, தசை வலிகள் போன்றவை ஏற்படுகின்றன.

5. எலும்புப் பிரச்னை: உடலுக்குத் தேவையான கால்சியம் சத்துகள் எலும்பில்தான் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சோடியமானது எலும்பில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சி விடுகிறது. பின் அது சிறுநீர் வழியாக சோடியம் வெளியேறும்போது கால்சியமும் வெளியேறிவிடுகிறது. இதனால் எலும்பு அரித்து எலும்புப்புரைகள் உருவாகின்றன. இதனால்தான் எலும்புகள் வலுவிழந்து மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு முறிவு, எலும்பு உறுதியின்மை போன்ற பிரச்னைகள் வருகின்றன. எனவே அளவான உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com