புத்தகத்தை கையில் எடுத்தாலே தூக்கம் வருகிறதா? உங்களுக்கு சில யோசனைகள்!

Some ideas for studying without falling asleep
Some ideas for studying without falling asleep
Published on

ம்மில் பலர், ‘புத்தகத்தை கையில் எடுத்தாலே தூக்கம் வருகிறது. ஆனால், புத்தகம் படிக்க வேண்டும். என்ன செய்வது என்று புரியவில்லை’ என புலம்புவதைப் பார்த்திருக்கிறோம். ‘நல்லாதான் இருக்கிறேன். என்னமோ தெரியல புத்தகத்தை கையில் எடுத்தவுடன் தூக்கம் வந்துவிடுகிறது’ என்று சொல்வார்கள் இன்னும் சிலர்.

ஒருசிலர் தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இவை அனைத்தும் மனிதர்களிடம் உள்ள இயல்பான குணங்கள்தான் என்றாலும், தேர்வு நேரத்தில் இவ்வாறு படிக்காமல் தூங்கினால் அது நமக்குத்தான் பெரும் பாதிப்பாக மாறும். நீங்கள் புத்தகம் படிக்க வேண்டும். ஆனால், தூங்கக் கூடாது. இது மிகவும் சுலபம்தான். தூக்கம் பறந்துபோகவும், புத்தகத்தை தொடர்ந்து படித்துப் பயன் பெறவும் சில எளிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

முதலில் படிக்கும்பொழுது எதனால் தூக்கம் வருகிறது என்று சிந்தியுங்கள். இவ்வாறு நடக்க நாம் செய்யும் சில தவறுகளே காரணம். முறையற்ற உறக்கம், உடல் சோர்வு, படிப்பில் ஆர்வமின்மை, வெறுப்போடு படித்தல் போன்ற பல காரணங்களால்தான் படிக்கும்பொழுது தூக்கம் வருகிறது.

இரவில் நன்கு உறங்கி விட்டு மறுநாள் படித்தால் உறக்கம் வராது. சிலர் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து படிப்பார்கள். அவ்வாறு செய்வதால் தூக்கம் வர வாய்ப்பிருக்கிறது. சிறிது நேரம் அமர்ந்தபடியும், சிறிது நேரம் நடந்தபடியும் படிப்பதால் தூக்கத்தை எளிதாக விரட்ட முடியும்.

இதையும் படியுங்கள்:
கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் கண் திறக்கும் யோக நரசிம்மர்!
Some ideas for studying without falling asleep

நல்ல வெளிச்சம் இருக்கும் அறையில் படிப்பதால் தூக்கம் வருவது கட்டுப்படும். படிப்பதற்கு முன்னர் வயிறு முட்டும் அளவிற்கு சாப்பிடக் கூடாது. அதேபோல், படுத்துக்கொண்டு படிக்கக் கூடாது. இதனால் தூக்கம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

படிக்கும்பொழுது தூக்கம் வராமல் இருக்க படித்ததை ஒரு பேப்பரில் எழுதிப் பார்க்கலாம். அதேபோல், அடிக்கடி தண்ணீர் அருந்துவதன் மூலம் உடல் களைப்பு ஏற்படாமல் இருக்கும். இதனால் படிக்கும்பொழுது தூக்கம் வருவது கட்டுப்படும்.

இதுபோன்ற சின்னச் சின்ன யோசனைகளை கடைப்பிடித்தாலே போதும், நீங்கள் புத்தகம் படிக்கும்போது உங்களை தூக்கம் தொந்தரவு செய்யாது. நிம்மதியாக புத்தகம் வாசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com