பித்தளை பூஜை பாத்திரங்கள் பளபளக்க சுலபமான ஐடியா தெரியுமா ?

பித்தளை பூஜை பாத்திரங்கள் பளபளக்க சுலபமான ஐடியா தெரியுமா ?
Published on

பூஜை பாத்திரங்கள் , வேலைப்பாடுகள் அதிகம் உள்ள பித்தளை பூஜை பாத்திரங்கள் மற்றும் கனமான பித்தளைப் பொருட்கள் என்று ஏகப்பட்ட பொருட்களை குவித்து வைத்து இருப்பவர்களுக்கு அவற்றை சுத்தம் செய்வதற்கு அதற்கென தனியாக மணிக்கணக்கில் நேரம் ஒதுக்க வேண்டி இருக்கும்.ஆனால் எவ்வளவு பித்தளை பொருட்கள் வைத்திருந்தாலும், ஒரு மணி நேரத்தில் அத்தனை பித்தளை பாத்திரங்களையும் பளபளன்னு மின்னச் செய்ய முடியுமே. இதை முயற்சி பண்ணி பாருங்க இனி உங்களுடைய நேரமும் மிச்சமாகும்.

பித்தளை பூஜைபாத்திரங்கள் பளபளக்க சுலபமான வழி ...!

பித்தளை பூஜை பாத்திரங்களை முதலில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது சாதாரண நியூஸ்பேப்பரைக் கொண்டு அதில் இருக்கும் மஞ்சள், குங்குமம், எண்ணெய் பசை போன்றவற்றை துடைத்து எடுக்க வேண்டும். முதலில் விளக்கில் இருக்கும் திரிகளை எடுத்துவிட்டு அதில் இருக்கும் எண்ணெயையும் டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பரில் தொட்டுக் துடைத்து எடுத்துவிடுங்கள்.

பின்னர் ஒரு காட்டன் துணி அல்லது டிஷ்யூ பேப்பரில் நீங்கள் மஞ்சள், குங்குமம்வைத்து இருக்கும் இடத்தில் எல்லாம் தண்ணீரை தொட்டு துடைத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் எல்லா பொருட்களும் சுத்தம் ஆகிய பின்பு ஒரு வாயகன்ற அடிகனமான பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு எலுமிச்சைப் பழஅளவிற்கு புளியை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை பாத்திரங்களின் மீது ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து விடுங்கள்.

பிறகு புளி கரைத்த அந்த பாத்திரத்தை அப்படியே எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கொதிக்கின்ற புளித் தண்ணீரில் எல்லா பாத்திரங்களையும் மூழ்கும் படி போட்டு விடவும் .பத்து நிமிடம் அப்படியே பாத்திரங்களை போட்டு கொதிக்க விடுங்கள். எலுமிச்சை பழத்தின் தன்மையும், கொதித்த புளி தண்ணீர் உடைய வீரியமும் சேரும் பொழுது பித்தளை பாத்திரத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் அதிலேயே நீங்கிவிடும். பிறகு அடுப்பை அணைத்து அப்படியே விட்டு விடாமல் , ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒரு இடுக்கி அல்லது கரண்டியால் அழுத்தி பிடித்து எடுத்து வெளியில் வையுங்கள்.

ஓரளவுக்கு சூடு ஆறியதும் சுத்தமான காட்டன் துணியால் துடைத்து விடுங்கள். அவ்வளவு தான் கஷ்டப்பட்டு தேய்க்காமலேயே, எந்த செயற்கை பொருளையும் பயன்படுத்தாமலேயே நம் வீட்டில் இருக்கும் புளி மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு எத்தகைய பூஜை பித்தளைப் பாத்திரங்களும் ரொம்பவே சுலபமாக ஒரு மணி நேரத்திற்குள் சுத்தம் செய்து அசத்தி விடலாம். வாரம் ஒரு முறை இப்படி செய்து வைத்தால் விடாப் பிடியான கருப்பு நிற கரைகள் இண்டு, இடுக்குகளில் சேராமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com