புகை, மது போன்று தீமை தரும் மேலும் நான்கு விஷயங்கள் எவை தெரியுமா?

Do you know four more things that are bad like smoke and alcohol?
Do you know four more things that are bad like smoke and alcohol?https://www.psychalive.org
Published on

புகைப்பிடித்தலும் மது அருந்துவதும் உடல் நலத்துக்குக் கேடு என்று அனைவருக்கும் தெரியும். அவற்றைப் போலவே தீமை தரும் நான்கு விஷயங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. சமூக வலைதளங்களில் அடிமையாகக் கிடப்பது: தற்போது ஸ்மார்ட் ஃபோனுடன் குடித்தனம் நடத்தும் அளவுக்கு அதனுடன் ஒன்றி இருக்கிறோம். டி.வி.யிலாவது விளம்பர இடைவேளை வரும். ஆனால், கையில் வைத்திருக்கும் செல்போனுக்கு இடைவேளையே கொடுப்பதில்லை. அதிலும் சமூக வலைதளங்களில் ஆழ்ந்து விடுவது பலருக்கும் மிகப் பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால், அவற்றில் நாம் காணும் கருத்துக்கள், விமர்சனங்கள், ரீல்ஸ் முதலியவை மனதையும் கருத்தையும் மிகவும் பாதிக்கின்றன. அவற்றில் சிலர் பதிவிட்டுள்ள கருத்துக்கள் மனதின் வக்கிரத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் அளவுக்கு மோசமான விதத்தில் இருக்கும். இவற்றை அடிக்கடி பார்ப்பதால் உணர்ச்சி குவியலின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். இதனால் நிம்மதி தொலைந்து மனதும் மூளையும் சோர்ந்து போகின்றன. தெளிவாக சிந்திக்கவோ, வேலைகளை சுறுசுறுப்பாக செய்யவோ முடிவதில்லை. மது, புகை போன்ற போதைப் பழக்கங்களுக்கு நிகரானது சமூக வலைதளங்களுக்கு அடிமையாகக் கிடப்பது.

2. பிறர் என்ன சொல்வார்களோ என்று யோசிப்பது?: சிலர் எதற்கெடுத்தாலும் பிறர் என்ன சொல்வார்களோ என்றுதான் முதலில் யோசிப்பார்கள். ஒரு உடை வாங்குவதில் தொடங்கி, அதை எந்த டிசைனில் தைக்கலாம், எந்த ஸ்டைலில் உடுத்தலாம்? அதை அணிந்து கொண்டால் பிறர் என்ன சொல்வார்களோ? கேலி செய்வார்களோ அல்லது பாராட்டுவார்களோ? என்று யோசித்து யோசித்து நேரத்தை வீணடித்து மனதையும் குழப்பிக் கொள்வார்கள். நிறைய பேர் பிறர் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காகவே தேவையே இல்லாமல் தனது சிறிய குடும்பத்திற்கு பெரிய காரை லோன் போட்டு வாங்குவது, மிகுந்த கடன்பட்டு பிரம்மாண்டமாக திருமணம் நடத்துவது, பெரிய அளவில் வீடு கட்டுவது என்று பிறரின் அபிப்பிராயங்களுக்காகவே வாழ்கிறார்கள். இது மிகுந்த மன உளைச்சலைத் தரும். அதிலும் சிலர், ''இந்த டிசைன் நல்லாவே இல்ல, வீடு ஏன் இப்படி கட்டி இருக்கீங்க? இந்தக் காரை ஏன் வாங்கினீங்க? என்று சொன்னால் நொறுங்கியே போய்விடுவார்கள். இவர்களால் எந்த காலத்திலும் நிம்மதியாக இருக்க முடியாது.

3. யாரையாவது எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பது: இது மிகவும் மோசமான மனநிலையை குறிக்கும் செயல். இவர்களால் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எந்தவிதமான நேர்மறை சூழலில் கூட தேடிக் கண்டுபிடித்து ஒரு குறையை சொல்வார்கள். இவர்களால் எதையும் சரியான கோணத்தில் பார்க்கவே முடியாது. திருப்தியும் அடைய மாட்டார்கள். அதனால் இவர்களுக்கு துளிக்கூட நிம்மதி இருக்காது.

இதையும் படியுங்கள்:
நோய்களைத் துரத்தும் துத்திக் கீரை!
Do you know four more things that are bad like smoke and alcohol?

4. எடுத்த எடுப்பிலேயே மறுப்பது: எந்த விஷயத்தையும் முழுதாகக் கேட்காமலேயே வேண்டாம் என்று மறுப்பது. தனது பிள்ளை புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் அது என்ன ஏது என்று முழுசாக அவனை சொல்ல விடாமலேயே, ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று ஒரேடியாக மறுப்பது. மூட்டு வலிக்கு சிறிது நேரம் எக்சர்சைஸ் செய்யலாம், வாக்கிங் போகலாம் என்று சொன்னால், ‘அதெல்லாம் என்னால முடியவே முடியாது’ என்று முயற்சியே செய்யாமல் மறுப்பது. இவர்கள் வாழ்வில் எந்த நிலையிலும் வெற்றி அடையவே முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com