குடும்ப நிதி நிலைமை சீரழிவுக்கான பத்து காரணங்கள் தெரியுமா?

குடும்ப நிதி நிலைமை சீரழிவுக்கான பத்து காரணங்கள் தெரியுமா?
Published on

ரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவுக்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தக் காரணங்களை யாராலும் மறுக்க முடியாது. நமக்கு வரும் வருமானம் போதவில்லை என்று கூறுகிறோம். ஆனாலும், நாம் எப்படி அந்த நிதி நிலைமையை இழந்து வருகிறோம் என்பதை பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா? இதோ கீழ்க்கண்ட காரணங்களைப் படியுங்கள். பிறகு உங்களுக்கே புரியும்.

1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கைகளில் தவழும் தொடுதிரைக் கைபேசிகள்.

2. சமூக மதிப்புக்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்.

3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக மதிப்பின் அடையாளமாக மாறிப்போனது.

4. வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை முதன்மையாகவும், உயர்வாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையைப் பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது.

5. சீரழிந்த வாழ்க்கைமுறையால் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது.

6. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்புக்கான பெருநிறுவன தயாரிப்பினைக் (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது.

7. ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தைப் பிறந்த நாள் மற்றும் ஆண்டு விழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்.

8. பிரம்மாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்களாலும், வணிக மயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்.

9. தங்கள் வருமானத்தில் அனுபவிக்க இயலாததைக் குறித்த காலத்தில், குறைந்த காலத்தில் அடைந்து விட கடன் மற்றும் கடன் அட்டைகள் இன்றியமையாததாக மாறிவிட்டதால்.

10. வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாகக் குப்பைகளைச் சேரச் செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது.

நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்துகொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம். இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி, அதிக மன அழுத்தம் மற்றும் பதற்றத்துக்கு வழிவகுக்கும். நம்மில் பெரும்பாலானோருக்கு இவை மிகவும் பொருந்தும். இக்காரணங்களை நாம் திருத்திக்கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com