குழந்தைகள் நல்லவர்களாக வளர கற்றுக்கொடுக்க வேண்டிய 10 நற்பண்புகள் தெரியுமா?

குழந்தைகள் கற்க வேண்டிய நற்பண்புகள்
குழந்தைகள் கற்க வேண்டிய நற்பண்புகள்
Published on

ல்ல பண்புகளே, ஒருவரை நல்ல மனிதராக செதுக்குகின்றன. குழந்தைப் பருவத்திலேயே அவற்றைப் பழக்கி விட்டால் வாழ்நாள் முழுவதும் அவை  ஒருவருடைய இயல்புகளாக மாறிவிடும். குழந்தைப் பருவத்தில் எதைக் கற்றுக் கொடுத்தாலும் குழந்தைகள் சுலபமாக கற்றுக்கொள்ளும். கதைகள், பாடல்கள், அனுபவங்கள் வாயிலாக இந்த நல்ல பண்புகளை அவர்களுக்குக் கற்றுத் தரலாம். இதில் மிக முக்கியம் குழந்தைகளுக்குக் கற்று தரும் நல்ல பழக்கங்களை பெற்றோரும் கடைப்பிடிக்க வேண்டும்.

கற்றுக்கொடுக்க வேண்டிய நல்ல பண்புகள்:

1. பேசும் வார்த்தைகள்: பெரியவர்களின் வார்த்தைகள் மூலம் குழந்தைகளும்  அதையே பின்பற்றும். அதனால் பேசும் சொற்கள், வார்த்தைகள் பேசும்போது கவனம் தேவை. வாசிக்கும் பழக்கத்தை பள்ளி செல்லும் வயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால், புத்தகம் படிக்கப் பழக்கினால் புத்தகங்கள் மூலம் அவர்களின் அறிவும் திறமையும் அனுபவமும்  வளரும்.

2. விளையாட்டு: மொபைலில் கேம்ஸ்களை பழக்காமல் வெளியில் விளையாட பழக்கினால், அவர்களுக்கு உற்சாகமும் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதால் மற்றவர்களுடன் பழகவும் நல்ல வாய்ப்பாகக் கிடைக்கும். உடலும் வலுவாகும்.

3. சேமிப்பு: பணத்தை சேமிக்கக் கற்றுக் கொடுத்தால் பணத்தின் மதிப்பும், சேமிப்பில் கிடைக்கும் பணம் கூடுதலாக கிடைப்பதை பார்த்து சேமிக்கும் பழக்கம் பிள்ளைகளுக்கு வரும்.

4. நேரத்தை பழக்குவது: தூங்கி எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, படிப்பது என எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய அவர்களைப் பழக்குங்கள். சோம்பல் இல்லாமல் எதையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பழக்கினால் அதையே பழகுவார்கள்.

5. சுத்தமாக இருத்தல்: பல் தேய்ப்பது, குளிப்பது, கை கால் கழுவுவது என சுத்தமான பண்புகளையும் கற்றுக்கொடுத்தால் வளர்ந்த பின்னும் அதையே அவர்கள் செய்வார்கள். மற்றவர்களும் அவர்களைப் பாராட்டுவார்கள்.

6. நட்புடன் பழக வைக்கலாம்: அக்கம் பக்கம் தங்கள் வயதில் இருக்கும் குழந்தைகள் என எல்லோருடனும் நட்பாகவும், அன்பாகவும் பழகச் சொல்லிக் கொடுத்தால் நட்புடன் இருக்கக் கற்றுக் கொள்வார்கள். இதுவும் ஒரு பண்பாகும்.

7. பொது இடங்களில் பழக்கம்: பொது இடங்களில் சாப்பிடும் முறை, நலம் விசாரிப்பது, வீட்டுக்கு வருபவர்களிடம் வணக்கம் சொல்லி வரவேற்கக் கற்றுக்கொடுத்தல், நன்றி, ப்ளீஸ், மன்னித்தல் போன்ற வார்த்தை பண்புகளை அவர்களுக்குச் சொல்லிப் பழக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
60 வயதுக்கு மேல் பசியின்மை ஏற்பட்டால் ஜாக்கிரதை!
குழந்தைகள் கற்க வேண்டிய நற்பண்புகள்

8. மற்றவர்களுடன் பகிரும் பண்புகள்: விளையாட்டு சாமான்கள், நொறுக்குத்தீனி, உணவு என அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்களை பழக்கினால் மற்றவர்களின் தேவையை உணர்ந்து கொடுப்பார்கள்.

9. மதிக்கக் கற்றுக்கொள்ளும் பண்புகள்: வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கக் கற்றுக் கொடுங்கள். அறிமுகம் இல்லாதவர்களிடமும், துணிச்சலாக பேசவும், எல்லோரிடமும் அன்பும், கருணையாகவும் இருக்கப் பழக்கி அதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

10. ஒழுங்கை கடைப்பிடிப்பது: எந்த விஷயத்திலும் ஒழுங்கை கடைப்பிடிப்பது, வீட்டில் விளையாடிய சாமான்களை மீண்டும் அவற்றை ஒழுங்காக எடுத்து வைப்பது, புத்தகங்களைப் படித்துவிட்டு பையில் அலமாரியில் அடுக்கி வைப்பது, தூங்கி எழுந்ததும் படுக்கையை மடித்து வைக்கப் பழகினால் அவர்களும் பழகுவார்கள். எந்த விஷயத்திற்கும் பொறுமை இல்லாமல், அடம் பிடிப்பது, கோபம், எரிச்சல்  இல்லாதவர்களாக வளர்வார்கள். இப்படி ஒரு குழந்தைக்கு நற்பண்புகளைக் கூறி வளருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com