நாப் (nap) எனப்படும் குட்டித்துக்கத்தின் 11 பயன்கள் தெரியுமா?

குட்டித் தூக்கம்
nappinghttps://www.vtnnews.com

‘நாப்பிங்’ எனப்படும் பகல் நேர குட்டித் தூக்கம் ஒருவருக்கு பலவிதங்களில் பயனளிக்கிறது. இரவு குறைந்தது 7 மணி நேரம் ஒருவர் உறங்க வேண்டும். பகல் முழுவதும் நன்றாக வேலை செய்பவர்களுக்கு 20 நிமிடங்கள் வரை நாப் எனப்படும் குட்டித் தூக்கம் எடுத்துக்கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. இதன் பயன்களைப் பற்றி பார்ப்போம்.

1. பகலில் 20 நிமிடங்கள் தூங்குவது செயல் திறனை அதிகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். குட்டித் தூக்கத்துக்கு பின்பு ஒருவரின் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கிறது. அவருக்கு உற்சாகத்தைத் தருகிறது.

2. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஞாபக சக்தியின் திறன் குறையத் தொடங்கும். அவர்கள் குட்டித் தூக்கம் எடுத்த பின்பு செயல்படும்போது அவர்களுடைய ஞாபக சக்தியின் திறன் அதிகரிக்கிறது. மூளையும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது. அதேபோல புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது.

3. ஒருவரின் படைப்பாற்றல் திறனை குட்டித் தூக்கம் மேம்படுத்துகிறது. ஒரு சிறிய தூக்கத்திற்கு பின்பு அவர்களுக்கு ஒரு மெண்டல் பிரேக் கிடைக்கும். அதன் பின்பு புதிய ஐடியாக்கள், புதிய சிந்தனைகள், யோசனைகள் வரும். ஒரு எழுத்தாளருக்கும் கவிஞருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

4. குட்டித் தூக்கம் மனநிலையை மேம்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகளை குறைக்கவும் உதவும். மேலும் நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்பட உதவுகிறது இரவில் சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு பகல் நேர குட்டி தூக்கம் சோர்வையும் அலுப்பையும் குறைக்க உதவுகிறது.

5. உடல் செயல்திறனை துல்லியமாக அதிகரிக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு மற்றும் அதிக உடல் செயல்பாடுகள் கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த குட்டித் தூக்கம் இருக்கிறது.

6. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. பதற்றம், டென்ஷன் போன்றவற்றை குறைத்து உடல் மற்றும் மனம் ரிலாக்ஸாக செயல்பட அனுமதிக்கிறது.

7. சிக்கல்கள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவுகிறது. சிறிது நேரம் பகல் தூக்கம் மேற்கொள்வதால் மூளை சிறிது நேரம் ஓய்வெடுக்கிறது. தூக்கத்திற்குப் பின்பு பிரச்னைகளுக்கான தீர்வுகளை யோசித்தால் நல்ல விடை கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
கொடிய நோய்களைத் தடுக்கும் கடுகு எண்ணெய்!
குட்டித் தூக்கம்

8. நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்கள், காதுகள், வாய் போன்றவற்றிற்கு சிறிது நேரம் ஓய்வு கிடைக்கிறது. பார்த்தல், கேட்டல் திறன் அதிகரிக்கிறது.

9. உயர் இரத்த அழுத்தம் இருக்கும் ஒருவருக்கு பகல் நேரத்து குட்டித்தூக்கம் இரத்த அழுத்தத்தை சரியான நிலையில் வைக்க உதவுகிறது. அதேசமயத்தில் இதய செயல்பாடுகளும் நன்றாக இருக்கிறது.

10. ஹார்மோனல் சமநிலை இல்லாதவர்களுக்கு பதற்றம், டென்ஷன், பசியுணர்வு இல்லாதது மற்றும் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் பாதிக்கும். அவர்களுக்கு பகல் நேரத்தில் தூக்கம் இந்தப் பிரச்னைகளை எல்லாம் சரி செய்கிறது.

11. அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு பகல் நேரத்தில் சிறிது நேரம் மட்டும் தூங்கினால் எடை மேலாண்மையை நிர்வகிக்க உதவுகிறது. தேவையில்லாமல் ஸ்நாக்ஸ் சாப்பிடவும் தோன்றாது.

தற்போது சில கம்பெனிகள் கூட பகல் நேரத்தில் பணியாளர்கள் குட்டித்தூக்கம் போட அனுமதிக்கிறார்கள். அப்போதுதான் பணியாளர்கள் மீண்டும் மதியத்திற்கு பிறகு நன்றாகவும், அதிக ஆற்றலுடன் வேலை செய்ய முடியும் என்ற காரணத்திற்காக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com