அதிகாலையில் எழுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

Do you know the benefits of waking up early in the morning?
Do you know the benefits of waking up early in the morning?
Published on

திகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் பல நன்மைகளை ஏற்படும் என்று சாஸ்திரங்களும் விஞ்ஞானமும் கூறுகின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை. காலை பொழுதில் சூரியனிடமிருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் போல் சக்தி வாய்ந்தவை. எனவேதான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்குப் புது தெம்பையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றன. மேலும், தேவர்களும் பித்ருக்களும் ஒன்று கூடும் நேரம் இது. எனவே, காலையில் அவர்களை நினைத்தால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதிகாலையில் எழுவதால் ஏற்படும் நன்மைகள்:

நீங்கள் அதிகாலை எழுவதால், நாள் முழுவதும் உங்கள் மனமும் உடலும் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

அதிகாலையில் எழுந்து உங்கள் நாளை துவக்குவதனால் அவசரம் இன்றி வேலைகளைப் பார்க்க முடியும். அதனால் உங்களுக்கு மன அழுத்தம் குறையும்.

பெரும்பாலும் காலையில் எழும்போது உங்கள் மூளையும் உடலும் அமைதியான சூழலில் இருந்தால் செயல் திறன் அதிகரிக்கும். எனவே, அதிகாலை எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதால் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் நன்மை கிடைக்கும்.

அதிகாலை எழுந்து படிப்பதனால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மாணவர்கள் மட்டுமல்ல, வேலைக்குச் செல்பவர்கள் கூட உங்கள் வேலையை அதிகாலை தொடங்கினால் உங்கள் வேலையில் நல்ல பலனைப் பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
பணமும் வெற்றியும் மட்டும்தான் வாழ்க்கையா?
Do you know the benefits of waking up early in the morning?

அதிகாலை எழும் பழக்கம் உங்களுக்கு இரவில் நல்ல உறக்கத்தைத் தரவல்லது. எனவே, முடிந்தவரை அதிகாலையில் எழுந்து, இரவு பத்து மணிக்குள் உறங்கும்படி உங்கள் நாளை வகுத்துக் கொள்ளுங்கள்.

எழுந்தவுடன் உள்ளங்கையில் விழிப்பது ஏன்?

காலையில் கண் விழித்தவுடன் உள்ளங்கைகளைப் பார்ப்பது பலரது பழக்கம். உள்ளங்கையின் அடிப்பாகத்தில் பார்வதி தேவியும், மத்தியில் சரஸ்வதியும், மேல் புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதனால் உள்ளங்கையில் விழிப்பதால், அன்றைய தினம் செய்ய வேண்டிய செயல்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com