சமூக வலைதளங்களில், ‘பிக் மீ கேர்ள்ஸ்’ (Pick Me Girls) என்கிற சொற்றொடர் மிகவும் பிரபலமாக இருக்கிறது. நிறையப் பெண்கள் தங்களை, ‘பிக் மீ கேர்ள்ஸ்’ என்ற ஹேஸ் ஸ்டாக் உடன் அறிமுகப்படுத்திக் கொண்டனர். இது மிகவும் வைரலானது. அவர்களின் இயல்பு குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
‘பிக் மீ கேர்ள்ஸ்’ என்று சொல்லிக்கொள்ளும் பெண்கள் தாங்கள் மற்ற பெண்களைப் போல குணாதிசயத்தில் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி இருப்பது தங்களை பெருமிதமாக உணர்வதாக அவர்கள் சொல்கிறார்கள். தங்களை, ‘பிக் மீ கேர்ள்ஸ்’ என்ற ஹேஸ் ஸ்டாக்கின் கீழ் பதிவிட்டபோது ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் பெற்றன.
‘இவர்கள் ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே பெண்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்’ என்று மற்ற பெண்கள் இவர்களை குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ‘இவர்கள் சமூகப் பெண்ணீயக் கருத்துக்களை கேலி செய்வார்கள். இதனால் மற்ற பெண்களை இவர்கள் வெறுக்கும் நிலை உருவானது’ என்று இவர்களை கேலி செய்து இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகின.
‘பிக் மீ கேர்ள்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் பெண்கள் மிகவும் கூல் மனப்பான்மை உடையவர்கள் என்கிறார்கள். பிற பெண்கள் ஒரே மாதிரி உடைகள் அணிவது, மேக்கப் செய்துகொள்வது போன்ற பெண்களின் செயல்களை பிக் மீ பெண்கள் விரும்புவதில்லை. இதைக் கண்டிக்கும் விதத்தில் இருக்கிறார்கள். பெண் தன்மை அதிகமாக உள்ள பெண்களை இவர்கள் விரும்புவதில்லை.
சில சமயங்களில் அவர்கள் பிற பெண்களின் விருப்பத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள். பெண்களிடம் இருந்து இவர்கள் விலகி இருக்கிறார்கள். அதனால் பிற பெண்களின் வெறுப்பை இவர்கள் சம்பாதித்து இருக்கிறார்கள் பிக் மீ பெண்களை நச்சுத்தன்மை உள்ளவர்களாக சித்தரித்து அவர்களை எதிர்க்கும் போக்கு சமீபத்தில் சமூக ஊடகங்களில் பிரபலமானது.
பெண்கள் பலவீனமானவர்கள், திறமையற்றவர்கள் மற்றும் கீழ்ப்படியும் குணம் உள்ளவர்கள் என்று சிறு வயதில் இருந்தே பெண்கள் கற்பிக்கப்படுகிறார்கள். அதனால் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தும் பெண்களை, பிக் மீ பெண்கள் எதிர்க்கிறார்கள். தங்களை தாழ்ந்த பாலினமாக கருதுகிறார்கள் என்று சமூகம் நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள் என்று பிக் மீ பெண்கள் கேலி செய்கிறார்கள்.
பாரம்பரியமாக பெண் தன்மை உள்ள பெண்களிடமிருந்து தாங்கள் விலகி நிற்பதாகவும், தனித்திருப்பதாகவும் வித்தியாசமாக குணங்களைக் கொண்டிருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். மற்ற பெண்களை உணர்ச்சிவசப்பட்டவர்கள், நியாயமற்றவர்கள் என்று நினைக்கிறார்கள். இவர்கள் பெண்களுக்கு எதிராக பேசுவதால் ஆண்களுக்கு இவர்களைப் பிடிக்கும் என்று நம்புகிறார்கள். ஆண்களின் கருத்துக்களுடன் உடன்படுகிறார்கள்.
இப்படிப் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளானபோதிலும் பல இளம்பெண்கள் தங்களை, ‘பிக் மீ பெண்கள்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.