நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் பேபி பூமர்களின் முக்கியத்துவம் தெரியுமா?

ஆகஸ்ட் 17, பேபி பூமர்ஸ் அங்கீகார தினம்
பேபி பூமர்ஸ்
பேபி பூமர்ஸ் https://fosterfollynews.net
Published on

பூமர் என்ற சொல் தற்போது மிகவும் பிரபலம். எந்த வயதினராக இருந்தாலும் பழைய பாரம்பரிய சிந்தனை கொண்டவர்களையும், தற்போதைய தொழில்நுட்பம், சமூகச்சூழல், நெறிமுறைகளுடன் தொடர்பில்லாமல் நடந்து கொள்பவர்களையும்  விவரிக்க பூமர் என்ற சொல் நகைச்சுவையாகயும், சில சமயங்களில் இழிவாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உண்மையில் பூமர்கள் நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளனர். அவர்களின் முக்கியத்துவத்தை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

யார் இந்த பூமர்கள்?

பூமர்கள் ஜெனரேஷன் எக்ஸ்க்கு முன் பிறந்த மக்கள் தொகையைக் குறிக்கிறது. 1946 மற்றும் 1964க்கு இடையில் பிறந்தவர்கள், குழந்தை பூமர்கள் என அறியப்படுகின்றனர். இரண்டாம் உலகப்போரின் முடிவை தொடர்ந்து குழந்தை பிறப்பு அதிகரித்தது. பேபி பூமர்கள் கலாசாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உட்பட சமூகத்தின் பல்வேறு அம்சங்களில் அதன் தாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தனர். பேபி பூமர்ஸ் அங்கீகார தினமாக அமெரிக்காவில் ஆகஸ்ட் 17ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

பூமர்களின் முக்கியத்துவம்:

பொருளாதார செழுமை: அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமையான காலத்தில் குழந்தை பூமர்கள் வளர்ந்தனர். நல்ல கல்வி, வேலை வாய்ப்புகள் மற்றும் வீட்டு உரிமைகள் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் கிடைத்து பயனடைந்தனர்.

ஓய்வூதியம்: அவர்களுக்கு வயதாகும்போது குறிப்பிடத்தக்க மக்கள் தொகையாக மாறினர். ஓய்வு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் சமூக, மருத்துவ பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டமிடல் தொடர்பான கொள்கைகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.

தொழிலாளர் பங்களிப்பு: பேபி பூமகள் பல தசாப்தங்களாக தொழிலாளர்களுக்கு ஒரு மேலாதிக்க உந்துசக்தியாக இருந்தனர். பொருளாதார வளர்ச்சி மற்றும் புதுமைகளை புகுத்தும் திறமை மிக்கவர்களாக இருந்தனர். பலர் வணிகம் அரசு மற்றும் தொழில் துறையில் தலைமை பதவிகளை வகித்தனர்.

நுகர்வோர் சக்தி: குழந்தை பூமர்கள் மக்கள் தொகையில் பெரும்பங்கு வகித்ததால் கணிசமான வாங்கும் திறனை கொண்டிருந்தனர். சந்தைகள் மற்றும் வீட்டு வசதி, வாகனம் சுகாதார மற்றும் பலவற்றின் நுகர்வோராக விளங்கினார்கள்.

சமூக மற்றும் கலாசார தாக்கம்: 1960 மற்றும் 70களில் சிவில் உரிமைகள் இயக்கம் பெண்கள் விடுதலை மற்றும் போர் எதிர்ப்பு போராட்டங்கள் உள்ளிட்ட முக்கிய கலாசாரம் மற்றும் சமூக இயக்கங்களில் குழந்தை பூமர்கள் முன்னணியில் இருந்தனர். அந்த இயக்கங்கள் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்களுக்கு வழிவகுத்தன. இசை ஃபேஷன் மற்றும் ஊடகங்கள் முதல் தொலைக்காட்சியின் எழுச்சி வரை உலகளாவிய கலாசாரத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினர்.

இதையும் படியுங்கள்:
விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டின் மகிமை!
பேபி பூமர்ஸ்

தொழில்நுட்ப முன்னேற்றங்கள்: குழந்தை பூமர்கள் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தனர். பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் உட்பட பல தொழில்நுட்ப முன்னோடிகள் இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள்தான். டிஜிட்டல் வயதுக்கு முந்திய வயதில் பிறந்திருந்தாலும் இவர்கள் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்றவாறு அன்றாட வாழ்வில் தொழில்நுட்பம் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதை அறிந்தனர்.

அரசியல் செல்வாக்கு: பல தசாப்தங்களாக தேர்தல்கள் மற்றும் கொள்கை முடிவுகளில் பேபி பூமர்கள் செல்வாக்கு மிகுந்த சக்தியாக இருந்து வாக்களித்தனர். இது சமூகப் பாதுகாப்பு போன்ற பகுதிகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கொள்கைகளை வடிவமைக்க உதவியாக இருந்தன. பல பேபி பூமர்கள் ஜனாதிபதிகள் மற்றும் குறிப்பிடத்தக்க அரசியல் பதவிகள் வகுத்தனர்.

ஹெல்த் கேர் தேவைகள்: வயதானதும் பேபி பூமர்கள், மருத்துவ தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் மூத்த பராமரிப்பு ஆகியவற்றில் பல முன்னேற்றங்கள் உருவாக காரணமாக இருந்தார்கள். சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com