Do you know the luck of having a mole anywhere on the body?
Do you know the luck of having a mole anywhere on the body?https://zeenews.india.com

உடலில் எங்கே மச்சமிருந்தால் என்ன அதிர்ஷ்டம் தெரியுமா?

ரிதான விஷயங்கள் வாழ்வில் நடந்து விட்டால், எல்லோரும் ஒருவரை, ‘மச்சக்காரி அல்லது மச்சக்காரன்’ என்று கூறுவார்கள். அதாவது அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம். மச்சத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்ப்போம்.

உடலில் எங்கெங்கே மச்சம் இருக்கிறதோ அதை பொறுத்து ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டம் மாறுப்படுகிறது என்று கூறினால் நம்புவீர்களா?

முதலில் மச்சம் எப்படி உடலில் உருவாகிறது என்று பார்க்கலாம். உடலுக்கு நிறமியைத் தரும் செல்களான மெலனோசைட் கூட்டமாக சேரும்பொழுது உருவாவதுதான் மச்சமாகும். மச்சம் வெவ்வேறு நிறத்தில், வடிவத்தில், அளவில் மாறுப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமுத்ரிகா சாஸ்திரத்தின்படி, நம் உடலில் மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து அதிர்ஷ்டம் மாறுபடும். எல்லா மச்சங்களும் அதிர்ஷ்டத்தை கொடுத்துவிட கூடியதில்லை.

நெற்றியில் மச்சமிருந்தால் மிகவும் தைரியசாலியாகவும், வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடியவராகவும் இருப்பார்கள். பெண்களுக்கு நெற்றியின் நடுவில் மச்சமிருந்தால், தைரியசாலியாகவும், அதிகம் பயணம் செய்ய விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.

பெண்களுக்கு கழுத்தில் மச்சமிருந்தால், மிகவும் அமைதியானவர்களாகவும் அறிவானவர்களாகவும் இருப்பார்கள். கடுமையாக உழைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

பெண்களுக்கு இடுப்பில் மச்சமிருந்தால், செல்வச் செழிப்பு கூடும். உயர் படிப்புகள் படித்து வாழ்வில் வெற்றியடைவார்கள்.

பெண்களின் புருவ மத்தியில் மச்சமிருந்தால், மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அறிவு, செல்வச் செழிப்பு, நல்ல முடிவுகள் எடுக்கும் திறன் படைத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

பெண்கள் கன்னத்தில் மச்சம் இருப்பது, மங்கலகரமாகக் கருதப்படுகிறது. அவர்கள் வாழ்வில் எல்லா ஆடம்பரமும் அனுபவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அதிகம் அறியப்படாத ஐந்து வகை ஆரோக்கிய நட்ஸ் உணவுகள் தெரியுமா?
Do you know the luck of having a mole anywhere on the body?

பெண்களின் பாதத்தில் மச்சமிருந்தால், அறிவு திறமையையும் வாழ்வில் வெற்றியடைவதையும் குறிக்கிறது. வலது பாதத்தில் மச்சமிருந்தால் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றியடைய முடியும். இதுவே, இடது பாதத்தில் மச்சமிருந்தால், அவர்கள் வழக்கத்திற்கு மாறாக வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பார்கள். வித்தியாசமான எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மச்சங்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று, சில நேரங்களில் மச்சம் கேன்சரின் அறிகுறியாக இருக்கும் என்பதேயாகும். மெலனோமா என்பது மிகவும் ஆபத்தான ஸ்கின் கேன்சராகும். இது பார்ப்பதற்கு மச்சம் போன்றே இருக்கும். ஆனால், மிகவும் வேகமாக பரவ ஆரம்பித்து விடும். இது இருப்பதால் எந்த வலியும் ஏற்படாததால், இதை ஆரம்பக்கட்டத்திலே கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட சருமத்தை நீக்குவதால் இந்த பிரச்னையை சரி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மச்சம் நமக்கு அதிர்ஷ்டத்தை தரக் கூடியது என்று நம்பப்பட்டாலும். அதற்கேற்ப உழைப்பு இருக்குமாயின் அதிர்ஷ்டமும் கைக்கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com