
மனிதனின் அத்தியாவசிய தேவை என்பது குடிநீர் தான். உணவின்றி கூட வாழ்ந்து விட முடியும். ஆனால் தண்ணீர் தான் மனிதனின் உடலில் பாதி இடங்களில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த உலகத்தில் உள்ள அனைவருமே தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். நமது பூமியில் தண்ணீர் அளவுக்கதிகமாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு சதவிகித்ததிற்கும் குறைவான அளவே நம்மால் குடிக்க முடியும்.
ஏனென்றால் பெரும்பாலானவை கடல் நீராகவே இருக்கிறது. இது போதாதென்று மனிதர்களும் தங்கள் தேவைகளுக்காக ஆறுகளையும் ஓடைகளையும் மாசுபடுத்தி தண்ணீரின் தரத்தை மோசமாக்கி வருகிறார்கள். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பெருமளவு தண்ணீர் மாசுபாடு அடைகிறது.
இவ்வுளவு மாசுபாடு ஏற்பட்டாலும் இன்று வரை இயற்கை நமக்கு பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்குகிறது. இன்று பலரும் தண்ணீர் மாசுபாடு காரணமாக மினரல் வாட்டர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரை பருக தொடங்கியுள்ளார்கள். இதன் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் பாட்டிலில் அடைத்து தண்ணீரை விற்கின்றன.
உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தண்ணீர் பாட்டில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன. இந்த தண்ணீர் பாட்டிலை பெரும்பாலும் குளிர்ச்சியாகவே மக்கள் குடிக்க விரும்புகிறார்கள். இந்த தண்ணீர் பாட்டிலில் சில தனித்துவமான விஷயங்கள் உள்ளன.
முக்கியமாக இதன் பாட்டிலின் மூடிகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு என்ன காரணம் என்று தெரியாமலேயே தாகத்திற்கு கடைகளில் தண்ணீரை வாங்கி பருகி வருகின்றோம். இனியாவது எச்சரிக்கையுடன் தண்ணீர் பாட்டில்களின் மூடிகளின் காரணத்தை தெரிந்து கொண்டு தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.
வெள்ளை மூடி: பதப்படுத்தப்பட்ட நீர்
கருப்பு மூடி: ஆல்கலைன் நீர்
நீல மூடி: ஊற்று நீர்
பச்சை மூடி: சுவையான நீர்
சிவப்பு மூடி: எலெக்ட்ரோலைட் மேம்படுத்தப்பட்ட நீர்
மஞ்சள் மூடி: வைட்டமின் செறிவுட்டப்பட்ட நீர்
இப்போது நீங்கள் அடிக்கடி வாங்கி குடிக்கும் குடிநீர் பாட்டில்களின் மூடிகளின் காரணத்தை ஒப்பிட்டு சரியானததை தினசரி பருகி வருகிறோமோ என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதை தவறும் பட்சத்தில் சில உடல்நல பிரச்சனைகளும் ஏற்படலாம். எனவே கடைகளில் உள்ள வாட்டர் கேன்களின் தண்ணீர் வாங்கி குடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரிக்கிறது.