காது குத்துவதில் உள்ள அறிவியல் காரணங்கள் தெரியுமா?

Scientific reasons behind ear piercing
Scientific reasons behind ear piercing
Published on

ண் குழந்தைகள் என்றும் பெண் குழந்தைகள் என்றும் வித்தியாசம் பார்க்காமல் நம் சமூகத்தில் காது குத்தப்படுவது ஒரு சடங்காகவே உள்ளது. இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கத்தான் சிறு வயதிலேயே காது குத்தப்படுகிறது. காது என்பது இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப் பகுதியாக விளங்குவதால் காது குத்துவதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என்று விஞ்ஞானபூர்வமாக கூறப்படுகிறது.

காது குத்தி தோடு அணிவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் குறையும் என்றும் கூறப்படுகிறது. காது குத்துவதன் மூலம் மூளையின் செயல்திறன் தூண்டப்படுகிறது. காது மடல்களில் துளையிட்டு காதணி போடும்பொழுது அதில் இருக்கும் செவித்திறன் நரம்புகள் தூண்டப்பட்டு காது கேட்கும் திறன் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. காதுகளில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகள் நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இதனை எப்பொழுது செய்ய வேண்டும்?

‘கர்ணவேத சடங்கு’ என்று அழைக்கப்படும் காதுகுத்து விழாவை நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும். எந்த மங்கலகரமான வேலையையும் நல்ல நேரத்தில் செய்ய ஐஸ்வர்யம் பல மடங்கு பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. பழங்கால நம்பிக்கைகளின்படி குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் இது செய்யப்பட வேண்டும். அப்படியில்லையெனில் ஒற்றைப்படை ஆண்டில் அதாவது மூன்று, ஐந்து அல்லது ஏழாவது வயதில் செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

காது குத்தும்போது ஆண் பிள்ளையாக இருந்தால் முதலில் வலது காதையும் பின்னர் இடது காதையும் குத்துவது வழக்கம். பெண் குழந்தையாக இருந்தால் முதலில் இடது காதையும் பிறகு வலது காதையும் துளைத்து நகைகள் அணிவிக்கப்படும்.

காது குத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

காது குத்துவதால் கண் பார்வை அதிகரிக்கும். காதின் நடுப்பகுதி நம் கண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மீது கொடுக்கும் அழுத்தம் காரணமாக நம் கண்கள் கூர்மையாக மாறும். இது மூளைக்கும் நன்மை பயக்கும்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் ஃபுட் உணவு பொங்கலின் 5 ஆரோக்கிய நன்மைகள்!
Scientific reasons behind ear piercing

காது குத்துவது என்பது அழகுக்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும்தான். குழந்தைகளுக்கு காது குத்தும்பொழுது அவர்களின் காதுகள் பஞ்சு போல் மென்மையாக இருப்பதால் வெள்ளி அல்லது தங்கத்தில் செய்யப்பட்ட எடை குறைவான சிறிய காதணிகளை அல்லது வளையங்களை அணிவிக்கலாம். இதனால் செவித்திறன் மேம்படுவதுடன், மூளையின் செயல்திறனும் தூண்டப்படும்.

காது குத்துவதால் நுரையீரல் மற்றும் சுவாச ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆஸ்துமா, மூச்சுப் பிரச்னைகள் போன்றவற்றை தடுக்கும். காது குத்துமிடத்தில் இருக்கும் மர்ம புள்ளிகள் ஆண், பெண் இருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் நல்லது.

‘அறுவை சிகிச்சைகளின் தந்தை’ என்று கூறப்படும் ஆச்சாரியா சுஷ்ருத்தா ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குடல் இறக்கத்துக்கு சிகிச்சையாகவும் காது குத்துவதை பரிந்துரை செய்துள்ளார். காது குத்துவது மட்டுமல்லாமல், காதணிகள் அணிந்து கொள்வதும் அவசியம். இதனால் நம் உடல் முழுவதும் ஆற்றல் பரவும் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com