புதுமணத் தம்பதிக்கு பால் பழம் கொடுப்பதன் ரகசியம் தெரியுமா?

Newlyweds
Newlyweds
Updated on

ம் முன்னோர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒவ்வொரு ரகசியங்கள் ஒளிந்திருக்கும். சிலவற்றை நேரில் கூறுவார்கள். சிலவற்றை செயல்பாடுகள் மூலம் கூறுவார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை நம் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒவ்வொரு காரணங்கள் நிச்சயமாக ஒளிந்து இருக்கும்.

பிரம்மிப்பூட்டும் ரகசியம்: பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும். கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும். அதிலும் கேலி கிண்டல், ஏன் சில நேரம் அதட்டல் கூட ஏற்படலாம்.

அந்த நேரங்களில் பெண், ஒரு பசு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளி கூட விஷம் இராதோ, அதுபோல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும், வாழைப்பழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அதுபோல் கணவனை சார்ந்து வம்ச விருத்தியை நீ தர வேண்டும் என குறிக்க பழமும் தருவதாக ஐதீகம்.

மணமகனுக்கும் ஏன் தருகிறார்கள் என்றால், ‘மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது. பக்குவமாக உறையிட்டு கடைந்து வெண்ணையை, நெய்யை எடுப்பாயாக. பாலை கெட வைத்து விடாதே’ எனக் குறிக்க பாலும், வாழை மரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாகப் பிரித்து நடுவார்களோ, அதுபோல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்.

இதையும் படியுங்கள்:
சமைக்காமல் சாப்பிடவே கூடாத 9 வகை உணவுகள் தெரியுமா?
Newlyweds

அதை பட்டுப்போக விடாமல், பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே மணமகனுக்கும் பாலும் பழமும் கொடுக்கிறார்கள்.

திருமணத்தில் பால், பழம் கொடுப்பது வேடிக்கையான ஒரு செயல் அல்ல. ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது. பாலும் பழத்திலும் கூட ஒரு கருத்தை வைத்திருக்கும் நம் முன்னோர்களின் அறிவுக்கூர்மை வியக்க வைக்கிறது அல்லவா?

logo
Kalki Online
kalkionline.com