'Cute aggression' என்றால் என்ன தெரியுமா?

Do you know what 'cute aggression' is?
Do you know what 'cute aggression' is?Image Credits: iStock
Published on

ம்முடைய வாழ்க்கையில் Cute aggressionஐ நாம் எல்லோருமே  ஒரு முறையாவது உணர்ந்திருப்போம். அது என்ன Cute aggression என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு க்யூட்டான ஒருவரைப் பார்க்கும்போது கிள்ள வேண்டும், அடிக்க வேண்டும், கடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படியென்றால் உங்களுக்கும் க்யூட் அக்ரஷன் இருக்கிறது என்று அர்த்தம். இதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Cute aggression என்பது மிகவும் க்யூட்டான ஒரு குழந்தையையோ அல்லது பூனைக்குட்டி போன்ற விலங்குகளையோ பார்க்கும்போது தோன்றும் ஒருவகை உளவியல் ரீதியான உணர்வாகும். க்யூட்டான குழந்தையை பார்க்கும்போது அதன் Cutenessஐ பார்த்து கன்னத்தை கிள்ளுவது போன்ற விஷயங்கள் செய்வதைத்தான் இவ்வாறு கூறுவார்கள். யாராவது உங்களிடம், ‘உன்னைக் கடிச்சி திங்கணும் போல இருக்கு, உன்னுடைய கன்னத்தை பிச்சி எடுக்கணும் போல இருக்கு’ என்று கூறினால் அதுவும் ஒருவகை க்யூட் அக்ரஷனுடைய வெளிப்பாடேயாகும்.

இது தப்பு கிடையாது. நிறைய பேருக்கு இதுபோலத்தான் தோன்றும். நமக்கு க்யூட்டான ஒரு விஷயத்தை பார்க்கும்போது நிறைய பாசிட்டிவ் எமோஷன்ஸ் உருவாகும். அது நம்முடைய மூளைக்கு புதிதாகத் தோன்றுவதால் ஒரு பிரேக் போடுவது போல ஒரு நெகட்டிவ் எமோஷனை ரிலீஸ் செய்யும். அதைத்தான் Aggression என்று சொல்கிறோம்.

அதனால்தான் கிள்ள வேண்டும், அடிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. இதுபோல செய்த பிறகு நம்முடைய அதிகப்படியான பாசிட்டிவ் எமோஷன்ஸ் கொஞ்சம் குறையும். அதிகமாக சந்தோஷத்தில் இருக்கும்போது அழுவதும், அதிகமாக பதற்றப்படும்போது சிரிப்பதும் இதுபோல எமோஷனை வெளிப்படுத்தும் விதமேயாகும்.

இதையும் படியுங்கள்:
காதலர்களே, Love bombing என்றால் என்னவென்று தெரியுமா?
Do you know what 'cute aggression' is?

எனவே, அடுத்த முறை க்யூட்டான குழந்தையை பார்க்கும்போது கன்னத்தை கிள்ள வேண்டும், கடிக்க வேண்டும் போன்ற எண்ணம் மனதில் தோன்றினால் நம்ம Psychopath ஆகிவிட்டோமோ? என்று பயப்படத் தேவையில்லை. இது நார்மலாக எல்லோருக்கும் தோன்றும் ஒரு விஷயம்தான். உங்களுக்கு எதைப் பார்த்தால் இந்த Cute aggression உணர்வு தோன்றும் என்று சொல்லுங்க பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com